கோலாலம்பூர்-
வேலை தேடும் பெண்ணை பாலியல் உறவுக்கு அனுப்புமாறு
பெற்ற தாயிடமே கேட்கும் ஒரு ஆசாமிக்கு 'காமநோய்' என முத்திரை
குத்துவதை சமூக ஊடக பயனர்கள் விமர்சித்து வருகின்றனர்.
அந்த ஆசாமி தொலைபேசியின் வழி ஒரு தாயிடம் அவரது மகளை உறவு கொள்ள
அழைக்கும் ஆடியோ வைரலாகி உள்ளது. சம்பந்தப்பட்ட ஆசாமியை அழைத்து துணை அமைச்சர் அந்ததுடைய தலைவர் ஒருவர் ஆலோசனை வழங்கும் வீடியோவில்
அந்த ஆசாமிக்கு 'காமநோய்' என்ற மனநோய் உள்ளதாக ஓர் ஆடவர் கூறுகின்றார்.
இந்த வீடியோவை கடுமையாக விமர்சிக்கும் சமூக ஊடக
பயனர்கள்
'காமம் என்பது மனநோய் அல்ல; அது ஒரு குற்றம்.
இதனை மூடி மறைக்க வேண்டாம் எனவும் அவருக்கு மனநோய் என்பதற்கான சான்றிதழை
யார் கொடுத்தது? 'மனநோய்' என்பவர்கள் என்ன
மருத்துவர்களா?' எனவும் அவர்கள் கேள்விகணை தொடுக்கின்றனர்.
வேலை வாங்கி கொடுப்பதற்கு பலனாக உறவு கொள்ள அழைக்கும்
அந்த ஆசாமியை எதிராக பலர் தங்களது கண்டனத்தை பதிவு செய்து வருகின்ற நிலையில் 'காமம் ஒரு மனநோய்' என கூறிய ஆடவருக்கு எதிராகவும் கண்டனங்களை
பதிவு செய்து வருகின்றனர்.
No comments:
Post a Comment