Sunday, 19 November 2017

மக்களுக்கான வேட்பாளர்'- சுங்கை சிப்புட் தொகுதியை தேமு கைப்பற்ற வழிவகுக்குமா?


ரா.தங்கமணி
சுங்கை சிப்புட்-
நாட்டின் 14ஆவது பொதுத் தேர்தலில் சுங்கை சிப்புட் நாடாளுமன்றத் தொகுதியில் மக்கள் விரும்பும் வேட்பாளரே களமிறக்கப்படுவர் என துணைப் பிரதமர் டத்தோஶ்ரீ ஸாயிட் ஹமிடி அண்மையில் இங்கு நடைபெற்ற தேசிய நிலையிலான தீபாவளி பொது உபசரிப்பில்  அறிவித்துள்ள சூழலில் இத்தேர்தலில் போட்டியிடும் தேமு வேட்பாளரின் வெற்றியை உறுதி செய்ய தொகுதி மஇகா உறுதி பூண்டுள்ளது.
கடந்த இரு தவணைகளாக சுங்கை சிப்புட் தொகுதியில் தேசிய முன்னணி வேட்பாளர்கள் தோல்வியடைந்துள்ள நிலையில் வரும் தேர்தலில் இத்தொகுதியை தேமு கைப்பற்ற எண்ணம் கொண்டுள்ளது.

அதற்கேற்ப பல ஆக்ககரமான திட்டங்களை வகுத்து செயல்படுகின்ற சுங்கை சிப்புட் தொகுதி மஇகா அதிரடியான நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது.
கடந்த இரு தவணைகளாக தேசிய முன்னணி வேட்பாளர் தோல்வி கண்டதால் இங்குள்ள மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் அதேபோன்றதொரு தவற்றை மீண்டும் இழைக்க மாட்டார்கள் என கருத்து தெரிவித்துள்ள சுங்கை சிப்புட் மஇகா தொகுதித் தலைவர் இளங்கோவன் முத்து, மக்களின் எதிர்நோக்கும் தற்போதைய பிரச்சினைகளுக்கு மஇகா, தேசிய முன்னணியே உதவி புரிந்து வருகின்றது. ஆதலால் மக்கள் தெளிவான சிந்தனையில் இம்முறை வாக்களிப்பர் எனவும் அவர் குறிப்பிட்டார்.

No comments:

Post a Comment