Sunday, 19 November 2017

பள்ளி தலைமையாசிரியர்கள் பணியிட மாற்றம்: அரசியலா? நடமுறை வழக்கமா?

ரா.தங்கமணி

கோலாலம்பூர்-
பினாங்கிலுள்ள ஒரு தமிழ்ப்பள்ளியின் தலைமையாசிரியர் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ள விவகாரம் தற்போது சர்ச்சையாகியுள்ள நிலையில் இந்நடவடிக்கை அரசியல் என கட்சியினரும் நடைமுறை வழக்கம் என கல்வி அமைச்சும் வாதிக்கும் சூழல் தற்போது உருவாகியுள்ளது.

பினாங்கு மாநில முதல்வர் லிம் குவான் எங்  மாக் மண்டின் தமிழ்ப்பள்ளிக்கு வருகை புரிந்து மானியம் வழங்கிய வேளையில் அப்பள்ளியின் தலைமையாசிரியர் உட்பட பல தலைமையாசிரியர்கள் வேறு பள்ளிகளுக்கு மாற்றப்பட்டுள்ளனர்.

இந்நடவடிக்கை ஒரு சாதாரணமானது எனவும் வழக்கமாக மேற்கொள்ளப்படும் நடைமுறை எனவும் கல்வி துணை அமைச்சர் டத்தோ பி.கமலநாதன் தெரிவித்துள்ளார்.

தற்போது துணை தலைமையாசிரியர்களாக இருப்பவர்களின் திறனை மேம்படுத்துவதற்காக கையாளப்படும் இந்நடவடிக்கையில் அரசியல் ஏதும் இல்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.

இச்சூழலில், பள்ளி தலைமையாசிரியர் இடமாற்றம் அரசியல் சார்ந்த நடவடிக்கையாகும் என பினாங்கு தமிழ்ப்பள்ளிகள் மேம்பாட்டு சிறப்பு குழுவின் உறுப்பினர் சத்தீஸ் முனியாண்டி தெரிவித்துள்ளார்.

கடந்தாண்டு புக்கிட் மெர்தாஜம் தமிழ்ப்பள்ளிக்கு பினாங்கு மாநில துணை முதல்வர் வருகை புரிந்ததால் அப்பள்ளியின் தலைமையாசிரியர் பணியிட மாற்றம் செய்யப்பட்டார்.அதேபோன்று பினாங்கு முதல்வர் வருகை புரிந்ததால் மாக் மண்டின் தமிழ்ப்பள்ளி தலைமையாசிரியர் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார் என அவர் குறிப்பிட்டார்.

No comments:

Post a Comment