Wednesday, 22 November 2017

3 பிள்ளைகளை கொன்று தந்தை தற்கொலை: நெஞ்சை உலுக்கும் துயரம்



சுங்கைப்பட்டாணி-
20 நாட்களுக்கு முன்னதாக மனைவி இறந்த வேளையில் மூன்று பிள்ளைகளை கொன்று கணவரும் தூக்கிட்டு தற்கொலை செய்துக் கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நேற்று நடந்த இத்துயரச் சம்பவத்தில் எஸ்.ரகுராம் (வயது 5), எஸ்.ஷஷ்ரீன் ராவ் (வயது 6), யமூனா (வயது 8) ஆகியோர் பெர்டானா ஹைட்ஸிலிலுள்ள  தங்கள் வீட்டின் அறையிலுள்ள மெத்தை, கட்டிலில் இறந்து கிடந்த வேளையில் தந்தை அதே அறையில் தூக்கிட்டுக் கொண்டார்.

தனது மூன்று பிள்ளைகளையும் தலையணையால் அமுக்கி மூச்சுத் திணற வைத்து கொன்றப் பின்னர், அவர்   தூக்கிட்டு தற்கொலை செய்துக் கொண்டிருக்கலாம்.

இந்த கொலை, தற்கொலை சம்பவத்திற்கான காரணம் விசாரிக்கப்டும் நிலையில் அப்பிள்ளைகளின் தந்தை கடன் தொல்லக்கு ஆளாகியிருக்கக்கூடும் என நம்பப்படுகிறது என்று சிஐடி தலைவர் துணை ஆணையர் மியோர் ஃபாரிட் அலாத்ராஷ் தெரிவித்தார்.

கடந்த 20 நாட்களுக்கு முன்னதாக   இப்பிள்ளைகளின் தாயாரான திருமதி வி.காமினி (வயது 39) தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது..

No comments:

Post a Comment