புனிதா சுகுமாறன்
ஈப்போ-
இன்று மேன்மை தங்கிய பேராக் சுல்தான் நஸ்ரின் முயிசுடின் ஷா அவர்களின் 61ஆவது பிறந்தநாளை முன்னிட்டு 331 பேருக்கு விருதுகள் வழங்கப்படவுள்ளன.
 |
டான்ஶ்ரீ நூர் ரஷிட் பின் இப்ராஹிம் |
பேராக் அரச விருதான டிகே விருதை கெடா சுல்தான் டான்ஶ்ரீ துன்கு சாலேஹுடின் சுல்தான் பட்லிஷா பெறவுள்ளார். டத்தோஶ்ரீ எனப்படும் எஸ்.பி.டி.எஸ். அரச மலேசிய போலீஸ் படையின் துணைத் தலைவர் டான்ஶ்ரீ நூர் ரஷிட் பின் இப்ராஹிம் பெறுகிறார்.
 |
ரவிச்சந்திரன் ராமச்சந்திரன் |
அதோடு . பிஎம்பி விருதை டாக்டர் ஜெபராஜ் ரோபர்ட் பீட்டர், டாக்டர் சுப்பிரமணியம் நாராயணன், க.தேவராஜு, பேராக் போதைப்பொருள் குற்றப்பிரிவு அதிகாரி ரவிச்சந்திரன் ராமச்சந்திரன் ஆகியோர் பெறுகின்றனர்.
 |
ஜொஸ்பின் மேரி சிங்கராயர் |
ஏஎம்பி விருதை ஜீவரத்தினம் பீபி, ஜொஸ்பின் மேரி சிங்கராயர், மகேந்திரன் ராமச்சந்திரன், மூர்த்தி கணபதி, பெருமாள்சாமி முனியாண்டி, மணிவேல் சுப்பிரமணியம் ஆகியோர் பெறுகின்றனர்.
 |
ராமேஸ்வரி முனுசாமி |
பிபிடி விருதை தாப்பா வட்டார தமிழ்நேசன் நிருபர் திருமதி ராமேஸ்வரி முனுசாமி, சங்கர் ராஜகோபால், சிவன்குமார் சுப்பிரமணியம் ஆகியொர் பெறுகின்றனர்.
 |
மகேந்திரன் ராமச்சந்திரன்- ஏஎம்பி |
பிஜேகே விருதை திருமதி மல்லிகா கந்தசாமி, சரஸ்வதி மெய்யப்ப செட்டியார், சுப்பிரமணியம் பெருமாள் ஆகியோர் பெறுகின்றனர்.
No comments:
Post a Comment