கோலாலம்பூர்-
பிரிம் உதவித் தொகைக்கான விண்ணப்பத்தையும் புதுப்பித்தலையும் வரும் திங்கட்கிழமை 27ஆம் தேதி தொடங்கி மேற்கொள்ளலாம். இதற்கான விண்ணப்பப்த்தை https://ebr1m.hasil.gov.my. என்ற 'பிரிம்' அதிகாரப்பூர்வ இணைய அகப்பக்கத்தில் பூர்த்தி செய்து கொள்ளலாம் என நிதியமைச்சு வெளியிட்ட ஓர் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. இவ்வாண்டு நவம்பர் 27 முதல் டிசம்பர் 31ஆம் தேதி புதிய விண்ணப்பம், புதுப்பித்துக் கொள்ளலாம்.
கடந்த முறை 'பிரிம்' உதவித் தொகையை பெற்றவர்கள் மரணித்திருந்தால் அவர்களது கணவன்/ மனைவி 2018க்கான பிரிம் உதவித் தொகைக்கு புதிதாக விண்ணப்பிக்க வேண்டும்.
அதோடு, ஏற்கெனவே பதிவு செய்து கொண்டவர்கள் ஏதேனும் மாற்றம் செய்ய விரும்பினால் தங்களது தகவல்களை புதுபிக்க வேண்டும் என கூறப்பட்டுள்ளது.
பிரிம் உதவித் தொகை குறித்து எவ்வித அறிக்கையையும் வாட்ஸ் அப், சமூக ஊடகங்களில் நிதியமைச்சு வெளியிடவில்லை. அதிகாரப்பூர்வ தகவல்கள் https://ebr1M.hasil.gov.my. என்ற அகப்பக்கத்தின் வழி அறிந்து கொள்ளலாம்.
வறுமை கோட்டில் வாழும் மக்களை 2018க்கான பிரிம் உதவித் தொகை சென்றடைய வேண்டும் என்பதை அரசாங்கம் இலக்காகக் கொண்டுள்ளது என அமைச்சு தெரிவித்துள்ளது.
2018க்கான பட்ஜெட் தாக்கலின்போது 1,200 வெள்ளி தொகை எவ்வித மாற்றமும் இன்றி அடுத்தாண்டும் தொடரப்படும் என பிரதமர் டத்தோஶ்ரீ நஜிப் துன் ரசாக் அறிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment