Friday, 17 November 2017

23ஆம் தேதி யூபிஎஸ்ஆர் தேர்வு முடிவு வெளியீடு



கோலாலம்பூர்-

யூபிஎஸ்ஆர் தேர்வு முடிவுகள் இம்மாதம் 23ஆம் தேதி வெளியீடு காணவுள்ளது என கல்வி அமைச்சு அதிகாரப்பூர்வ தகவலை வெளியிட்டுள்ளது.

நாடு முழுவதிலும் 8,085 தேர்வு மையங்களிலிருந்து மொத்தம் 443,794 மாணவர்கள் இவ்வாண்டு யூபிஎஸ்ஆர் தேர்வை எழுதினர். 

23ஆம் தேதி காலை 10.00 மணி தொடங்கி மாணவர்கள் தங்களின் தேர்வு முடிவுகளை அவரவர் பள்ளிகளில் பெற்று கொள்ளலாம். அதோடு, மாணவர்கள் MySMS 15888 என்ற குறுஞ்செய்தி மூலமாகவும் தங்களது தேர்வு முடிவுகளை அறிந்து கொள்ளலாம். 23ஆம் தேதி காலை 10.00 மணி முதல் 29ஆம் தேதி வரை இதன் சேவை நீடிக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment