Friday, 17 November 2017

நவ.21இல் பேராக் சட்டமன்ற கூட்டத் தொடர்- டத்தோ தங்கேஸ்வரி


ரா.தங்கமணி, கோ.பத்மஜோதி
ஈப்போ-
பேராக் மாநிலத்தின் 5ஆவது கூட்டத் தொடர் வரும் 21ஆம் தேதி தொடங்கவிருக்கிறது என மாநில சட்டமன்ற சபாநாயகர் டத்தோ எஸ்.தங்கேஸ்வரி தெரிவித்தார்.

மாநில பட்ஜெட்டை தாக்கல் செய்யும் கூட்டத் தொடராக திகழும்  இது 5 நாட்களுக்கு தொடர்ந்து நடைபெறும் என இன்று நடைபெற்ற செய்தியாளர் கூட்டத்தில் அவர் தெரிவித்தார்.

இவ்வாண்டுக்கான கடைசி கூட்டத் தொடராகவும் கருதப்படும் இதில் பல்வேறு விவாதங்கள் நடைபெறலாம் என அவர் குறிப்பிட்டார்.

No comments:

Post a Comment