Saturday, 4 November 2017

சிலாங்கூர் பட்ஜெட் 2018: இந்திய தொழில்முனைவர் நிதி மும்மடங்கு அதிகரிப்பு




ஷா ஆலம்-
சிலாங்கூரிலுள்ள இந்திய தொழில்முனைவர்களுக்கான நிதி ஒதிக்கீட்டை 3 மடங்காக அதிகரித்து 'இனிப்பான' அறிவிப்பை வெளீயிட்டுள்ளது சிலாங்கூர் அரசு.

இன்று ஷா ஆலாமிலுள்ள அரசு செயலகத்தில் 2018ஆம் ஆண்டுக்கான மாநில பட்ஜெட்டை தாக்கல் செய்த மந்திரி பெசார் டத்தோஶ்ரீ அஸ்மின் அலி இந்த தகவலை அறிவித்தார்.


பி40 பிரிவுக்கு உட்பட்ட இந்திய சமூகத்தின் மேம்பாட்டை உறுதி செய்யும் வகையில் இந்த நிதி ஒதுக்கீடு அமையவுள்ளது. இணைய வர்த்தகம், 'கிராஃபிக் டிசைன்', தையல் கலை, புகைப்படம், 'டிஜிட்டல் மார்க்கெட்டிங்', மலர் வடிவமைப்பு போன்ற துறைகளில் அதிக கவனம் செலுத்தப்படுகிறது.

"இம்மாநிலத்திலுள்ள இந்திய சமுதாயத்தை மேம்படுத்துவதை என்னுடைய கடமையாக கருதுகிறேன். அதன் அடிப்படையில் இந்திய தொழில்முனைவர்களுக்காக ஒதுக்கீடு செய்யப்பட்ட 10 லட்சம் வெள்ளி இந்த பட்ஜெட்டில் 30 லட்சம் வெள்ளியாக அதிகரிக்கப்பட்டுள்ளது" என அஸ்மின் அலி கூறினார்.  

No comments:

Post a Comment