Saturday, 4 November 2017

சிலாங்கூர் பட்ஜெட் 2018: 500 இருதய நோயாளிகளுக்கு வெ.10 மில்லியன்





ஷா ஆலம்-
2018ஆம் ஆண்டு முதல் குறைந்த வருமானம் பெறுவோர் தேசிய இருதய கழகத்தில் (ஐஜேஎன்) இலவச சிகிச்சை பெறுவதற்கு ஏதுவாக 10 மில்லியன் வெள்ளியை ஒதுக்கீடு செய்துள்ளது சிலாங்கூர் அரசு.

இருதய குழாய் அடைப்பு நாட்டின் முதன்மை உயிர்கொல்லி நோயாக கருதப்படுகிறது என தெரிவித்த சிலாங்கூர் மந்திரி பெசார் டத்தோஶ்ரீ அஸ்மின் அலி, 500 இருதய நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கும் வகையில் இந்த 10 மில்லியன் வெள்ளி நிதி ஒதுக்கீடு செய்யப்படுகிறது என்றார்.

No comments:

Post a Comment