பேராக் அரசு ஊழியர்களுக்கு 2,000 வெள்ளி சிறப்பு நிதி வழங்கப்படும்
என மாநில அரசு இன்று அறிவித்துள்ளது.
இந்த நிதி உதவி இரு தவணைகளாக வழங்கப்படும். முதல் கட்டமாக அடுத்த
மாதம் 1,000 வெள்ளியும் அடுத்தாண்டு கொண்டாடப்படும் நோன்பு பெருநாளின் போது எஞ்சிய
1,000 வெள்ளியும் வழங்கப்படும் என இன்று நடைபெற்ற மாநில பட்ஜெட் தாக்கலின் போது மாநில
மந்திரி பெசார் டத்தோஶ்ரீ ஸம்ரி அப்துல் காதீர் தெரிவித்தார்.
இந்த சிறப்பு நிதி உதவியானது தேசிய முன்னணி அரசு நிர்வாகத்தின்
நன்றியை புலப்படுத்தும் விதமாக வழங்கப்படுகிறது என்றார் அவர்.
No comments:
Post a Comment