செர்டாங் -
பெரிய கால்வாயை நோக்கி மண் சரிய ஆரம்பித்ததால் அங்கு நிறுத்தி வைக்கப்பட்ட 11 கார்களும் கால்வாயில் விழுந்து சேதமடைந்தன. இச்சம்பவம் செர்டாங், தாமான் லெஸ்தாரி பெர்டானாவில் நிகழ்ந்தது.
இந்த மண் சரிவினால் அங்குள்ள கட்டடங்களுக்கு பாதிப்பு ஏதும் நேரவில்லை என்பதோடு எவ்வித உயிருடற்சேதங்களும் ஏற்படவில்லை.
இச்சம்பவத்தை அடுத்து சம்பவ இடத்திற்கு எட்டு தீயணைப்பு அதிகாரிகள் இரண்டு தீயணைப்பு வண்டிகளில் விரைந்தனர். அப்பகுதியில் விசாரணை நடத்தும் பொருட்டு, பொதுமக்கள் யாரும் அங்குச் செல்லக் கூடாது என்றும், அச்சம்பவம் குறித்த விவரங்களை சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் சமர்ப்பித்து விட்டதாகவும் சிலாங்கூர் தீயணைப்பு மற்றும் மீட்புப் படை துணை இயக்குனர் முகமட் சானி ஹரூல் தகவல் தெரிவித்தார்.
No comments:
Post a Comment