கோலாலம்பூர்-
2011 முதல் மேற்கொள்ளப்பட்ட மை டஃப்தார் நடவடிக்கையின் வழி பதிவு செய்யப்பட்ட 12 ஆயிரம் பேரில் 7,126 பேருக்கு குடியுரிமை வழங்கப்பட்டுள்ளன. அதில் இவ்வாண்டும் மேற்கொள்ளப்பட்ட 'மெகா மை டஃப்தார்' நடவடிக்கையின் மூலம் பதிவு செய்யப்பட்ட 1.054 பேரில் 124 பேருக்கு முதற்கட்டமாக இன்று வழங்கப்பட்டுள்ளது என மஇகா தேசியத் தலைவர் டத்தோஶ்ரீ டாக்டர் எஸ்.சுப்பிரமணியம் தெரிவித்தார்.
மஇ கா மேற்கொண்ட பல்வேறு முயற்சிகளின் பலனாக அரசாங்கம் மேலும் 1,054 பேருக்கு மலேசிய குடியுரிமைக்கான அனுமதியை வழங்கியுள்ளது. அவர்களில் 124 பேர் இன்று பிரதமரிடமிருந்து அதற்கான பத்திரங்களை பெறவிருக்கின்னர்.
பதிவு செய்துள்ளவர்களில் சிலர் ஆவணப் பிரச்சினையை எதிர்நோக்குவதால், அவர்களது பிரச்சினைக்குத் தீர்வுக் காண தாம் விரைவில் துணைப் பிரதமரும், உள்துறை அமைச்சருமான டத்தோஸ்ரீ டாக்டர் அமாட் சாயிட் ஹமிடியை சந்திக்க விருப்பதாக இந்தியர்களுக்கான சிறப்பு அமைச்சரவைக் குழுவின் நிர்வாகச் செயற்குழுத் தலைவர் அவர் குறிப்பிட்டார்.
திருமணம் செய்து கொள்ளும் தம்பதிகள் அதனை முறையாகப் பதிவுச் செய்வது கட்டாயமாகும். பின்னர், தங்களுக்குப் பிறக்கும் குழந்தையைக் குறிப்பிட்ட நாளுக்குள் பதிவு துறையில் பதிவுச் செய்வதும் அவசியமாகும். இவ்வாறு செய்யத் தவறுகின்றவர்கள் பின்னாளில் பல்வேறு இன்னல்களுக்கு ஆளாகின்றனர்.
கோலாலம்பூர், மெனாரா டிபிகேஎல் ஆடிடோரியத்தில் இன்று 124 பேருக்கு மலேசியக் குடியுரிமைக்கான அனுமதி பத்திரம் வழங்கப்பட்ட நிகழ்வில் என அவர் இவ்வாறு கூறினார்.
பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் துன் ரசாக் தகுதி பெற்றவர்களுக்கு குடியுரிமைப் பத்திரங்களை எடுத்து வழங்கினார். இந்த நிகழ்வில் துணைப் பிரதமரும், உள்துறை அமைச்சருமான டத்தோஸ்ரீ டாக்டர் அமாட் ஸாயிட் ஹமிடி, கூட்டரசு பிரதேச அமைச்சர் டத்தோஶ்ரீ தெங்கு அட்னான் தெங்கு மன்சோர், பிரதமர் துறை துணையமைச்சர் டத்தோஸ்ரீ எஸ்.கே.தேவமணி, இளைஞர் விளையாட்டுத் துணையமைச்சர் டத்தோ எம். சரவணன், செடிக் தலைமை இயக்குனர் பேராசிரியர் முனைவர் என். எஸ். இராஜேந்திரன், தேசிய முன்னணி உறுப்புக் கட்சிகளின் தலைவர்கள் உட்பட பலர் திரளாக கலந்து சிறப்பித்தனர்.
No comments:
Post a Comment