Friday, 13 October 2017

வசதி குறைந்தவர்களை அடையாளம் கண்டு உதவுவதே உண்மையான சேவை

புனிதா சுகுமாறன்

தீபாவளி திருநாளை முன்னிட்டு வசதி குறைந்தவர்களுக்கு அன்பளிப்பு வழங்குவது சகஜமான ஒன்றுதான். ஆனால் அந்த அன்பளிப்புகள் உண்மையிலேயே வசதி குறைந்தவர்களைதான் போய் சேர்கின்றதா? என்பதே ஆயிரமாயிம் கேள்வியாகும்.

ஒரு கூட்டத்தை கூட்டி மக்களுக்கு உதவி செய்வதை விட வசதி குறைந்தவர்களை அடையாளம் கண்டு உதவ வேண்டும் எனும் நோக்கில்  களமிறங்கி சேவை செய்வதாக பேராக் மாநில சட்டமன்ற சபாநாயகர் திருமதி தங்கேஸ்வரி வலியுறுத்தினார்.
புந்தோங் கம்போங் தைலி, கம்போங் ஹாக்குவான் ஆகிய பகுதிகள் வசதி குறைந்த நிலையில் வாழும் மக்களை அடையாளம் கண்டு அவர்களுக்கு உதவிப் பொட்டலங்கள் வழங்கப்பட்டன.

தீபாவளி திருநாளில் வறுமையில் வாடுபவர்களும் விடுபட்டு விடக்கூடாது எனும் நோக்கில் இத்தகைய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது என திருமதி தங்கேஸ்வரி  கூறினார்.
இரு நாட்களுக்கு முன்னரே இங்கு வசதி குறைந்த நிலையிலான மக்களை நேரடியாள களமிறங்கி தேர்வு செய்ததோடு பின்னர் அவர்களுக்கு உதவிப் பொட்டலங்கள்  வழங்கப்படுகின்றன என மஇகா மகளிர் பிரிவு துணைத் தலைவி திருமதி தங்கராணி குறிப்பிட்டார்.
தீபாவளி பெருநாளில் வசதி குறைந்தவர்களும் சந்தோஷத்துடன் கொண்டாட வேண்டும்;  வாழ்க்கையில் பின்தங்கி கிடக்கின்றோமே என்ற எண்ணத்தில் துவண்டு விடக்கூடாது எனும் நோக்கில் உதவிப் பொட்டலங்களோடு அன்பளிப்பும் வழங்கப்பட்டது.

இந்த நன்னாளில் தங்களது வட்டாரங்களில் வறுமையில் வாடும் மக்களுக்கு  அருகிலுள்ளவர்கள் உதவிட வேண்டும் அவர் குறிப்பிட்டார்.

No comments:

Post a Comment