Tuesday, 10 October 2017

இந்தியர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் பொருளாதார உருமாற்று திட்டங்கள் அவசியம் - பேராசிரியர் இராமசாமி

சுகுணா முனியாண்டி 

புக்கிட் மெர்தாஜம்-
பினாங்கு இந்தியர்களுக்கு மட்டுமின்றி பொதுவாக வர்த்தகர்களுக்கென  சிறந்ததொரு எதிர்காலத்தை அமைத்துக் கொடுக்கும் தூரநோக்கு திட்டத்தின்  முதல் அஸ்திவாரம்தான்  தமிழர் குரல் முன்னெடுத்துள்ள  'இ -பிஸ்னஸ்' பயிலரங்கம் என பினாங்கு மாநில துணை முதல்வர் பேராசிரியர் பி.இராமசாமி தெரிவித்தார்

மாநிலத்தில் சிறப்பாக இயங்கி வரும் தமிழர் குரல் இயக்கம் ஏற்பாட்டில் இணையதள வியாபாரம் பற்றிய பயிலரங்கம் சம்மிட் ஹோட்டலில் நடைப்பெற்றது. இணையதளத்தில் வியாபாரம்
மேற்கொள்ளும் இந்திய வியாபாரிகள் உட்பட அத்துறையில் ஆர்வமுள்ள இந்தியத் தொழில் முனைவர்கள் என  50க்கும் மேற்பட்டோர் பங்குக் கொண்டனர் பயன் பெற்றனர்.
இந்த சிறப்பான நிகழ்வை நிறைவை முன்னிட்டு சிறப்பு பிரமுகராக கலந்துக் கொண்டு பங்குபெற்றவர்களுக்கு நற்சான்றிதழ் வழங்கிய  துணை முதல்வர் பேராசிரியர் செய்தியாளர்களிடம் தெரிவித்தார் .

இணையதள வியாபாரத்தின் வாயிலாக இளைஞர்கள் தங்களின் வியாபாரத்தை பரவலாக மேற்கொள்ளலாம். அதிக லாபாம்  ஈட்டலாம். தற்போது காலம் அதிவேகமாக சென்றுக் கொண்டிருக்கின்ற நிலையில் இதுபோன்ற வியாபாரத்தையே மக்கள் விரும்புகின்றனர். இதுபோன்ற வியாபாரங்கள் விரைவாக மக்களின் தேவைகளை  பூர்த்தி  செய்கின்றன  என்றார். இத்துறையில் நாம் இந்தியர்களும் வெற்றிக் காண வேண்டும் என்றார். நல்ல வாய்ப்புகளை வர்த்தகர்கள் ,வர்த்தகர்களாக உருவாகவிருக்கும் இளையோர்களுக்கு  அதனை சிறப்பாக  செயல்படுத்தி வரும் தமிழர் குரல் இயக்கத்துக்கு தமது வாழ்த்துகளை தெரிவித்துக் கொண்டார்
ஒரு நாள் நடத்தப்பட்ட பயிலரங்கம் வழி இளைஞர்கள் அதிக பலன் அடைவர் என நம்புவதாக கூறிய அவர், தகுந்த பயிற்சியும் அணுகுமுறைகளும் அவர்களை உருமாற்றும் என்றும்  மேலும் தெரிவித்தார் ,

இணையதள வியாபாரிகள் தங்களின் வியாபாரத்தை பரவலாக செய்வதுடன் நுணுக்கங்களை கற்று கொள்ள வேண்டும்; வாழ்க்கையில்  முன்னேற்றம் காண வேண்டும் என்ற நோக்கத்தில்  ஏற்பாடு செய்யப்பட்டது.

இந்த பயிலரங்கம் வருங்காலத்தில் ஜோகூர் , நெகிரி செம்பிலான், கூட்டரசு பிரதேசம்  விலயா ஆகியவற்றில் மேற்கொள்ளவிருகின்றோம். மற்ற இனத்திற்கு நிகராக நாமும் பொருளாதார நிலையில் வெற்றி காண வேண்டும் என்ற உன்னத நோக்கில் இந்த பயிலரங்கம் ஏற்பாடு செய்யப்பட்டது என இயக்கத்தின் தலைவர் டேவிட் மார்சல் தெரிவித்தார்
இந்நிகழ்வில் இந்த பயிலரங்கத்தை சிறப்பாக  டத்தோ கணேஷ், ஜே சான் ஆகியோர் வழிநடத்தினர்.  இந்நிகழ்வில்  இயக்க செயலவையினர் கலந்துக் கொண்டனர்.

No comments:

Post a Comment