இயக்குனர் கார்த்திக் ஷாமளன் இயக்கத்தில் உருவான 'என் வீட்டு தோட்டத்தில்' திரைப்படம் தற்போது மலேசியத் திரையரங்களில் திரையீடு கண்டு வருகிறது.
திரில்லர் திரைப்படமாக உருவாகியுள்ள இத்திரைப்படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்று வருகின்ற போதிலும் மலேசிய ரசிகர்களின் ஆதரவு குறைவாக உள்ளது. இதனால் இன்னும் சில தினங்களில் இத்திரைப்படம் சில திரையரங்குகளிலிருந்து நீக்கப்படும் சூழலை எதிர்நோக்கியுள்ளது.
இதனால் ஒரு காணொளியை வெளியிட்டுள்ள கார்த்திக் ஷாமளன், 'என் தோட்டத்தில் திரைப்படம் நாடு தழுவிய நிலையில் திரையீடு கண்டு வருகிறது. இந்த படத்திற்கு நல்ல விமர்சனங்களே வந்து கொண்டிருக்கிறது.
ஆனால், படம் வெளியான நான்கே நாளில் கிடைக்கக்கூடிய விஷயம் என்னவென்றால் வரும் வியாழக்கிழமையோடு வசூல் கிடைக்க வேண்டிய திரையரங்கிலிருந்து இந்த படம் நீக்கப்படும் என்பதுதான்.
இதற்கு காரணம், கடந்த நான்கு நாட்களாக குறைந்த ஆட்களே திரையரங்கிற்கு வந்து படத்தை பார்த்துள்ளனர். நல்ல விமர்சனங்கள் கிடைத்தும் படத்திற்கு குறைவான ஆட்களே வந்துள்ளதற்கான காரணம் தெரியவில்லை.
மாங்காய் திருடுற வீடியோவையெல்லாம் வைரலாக்குகிறோம். நான் கஷ்டப்பட்டு இந்த படத்தை பண்ணியுள்ளேன். ஒரே ஒருமுறை இந்த படத்தை தியேட்டரில் போய் பாருங்கள். இந்த படம் உங்களுக்கு பிடிக்கவில்லையென்றால் இனிமேல் காலத்துக்கும் நான் எடுக்கும் படங்களை பார்க்க வேண்டாம். ஒரே ஒருமுறை போய் பாருங்கள்.
இந்த வெள்ளிக்கிழமைக்குள் நீங்கள் படத்தை பார்க்கவில்லையென்றால் இன்னும் எத்தனை தியேட்டர்களிலிருந்து போகும் என தெரியவில்லை' என கார்த்திக் ஷாமளன் மலேசிய ரசிகர்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
வீடியோ காணொளி கீழே இணைக்கப்பட்டுள்ளது:
No comments:
Post a Comment