Tuesday, 24 October 2017

வசதி குறைந்த மக்களுக்கு ஐஆர்சி கிளப்பின் தீபாவளி அன்பளிப்பு

ரா.தங்கமணி

சுங்கை சிப்புட்-
தீபாவளி திருநாளை முன்னிட்டு சுங்கை சிப்புட் ஐஆர்சி கிளப்பின் தீபாவளி அன்பளிப்பு நிகழ்வு அண்மையில் இங்கு சிறப்பாக நடைபெற்றது.

வசதி குறைந்த மக்களும் தீபாவளி பெருநாளை சிறப்புடன் கொண்டாட வேண்டும் எனும் நோக்கில் இந்த அன்பளிப்பு நிகழ்வு நடத்தப்பட்டது.
ADVERTISEMENT

இந்நிகழ்வில் இவ்வட்டாரத்தில் உள்ள வசதி குறைந்த மக்களுக்கு உணவுப் பொட்டலங்கள் வழங்கப்பட்டன.
சுமார் 250 பேருக்கு உணவுப் பொட்டலங்கள் வழங்கப்பட்டன என ஐஆர்சி கிளப்பின் தலைவர் கிருஷ்ணன் தெரிவித்தார்.
ADVERTISEMENT

கடந்த 15 ஆண்டுகளாக ஐஆர்சி கிளப் இந்நிகழ்வை நடத்தி வருவதாக குறிப்பிட்ட கிருஷ்ண ன், 2002ஆம் ஆண்டு முதல் இந்நிகழ்வு நடத்தப்படுகிறது என அவர் குறிப்பிட்டார்.
இந்த அன்பளிப்பு நிகழ்வில் பூச்சோங் தொழிலதிபரும் மதிலன் நிறுவன இயக்குனருமான யோகேந்திரபாலன், பேராக் மஇகா இளைஞர் பிரிவுத் தலைவர் மு.நேருஜி, தொழிலதிபர் விஜயன், தொகுதி முன்னாள் மஇகா தலைவர் ஜேபி மணியம்  உட்பட திரளான பிரமுகர்கள் கலந்து கொண்டு மக்களுக்கு அன்பளிப்புப் பொட்டலங்களை எடுத்து வழங்கினர்.

No comments:

Post a Comment