Thursday, 19 October 2017

தித்திக்கும் தீபாவளி - வாழ்த்தும் நினைவுகளும்

புனிதா சுகுமாறன்
தீபாவளி திருநாள் என்றாலே பல வகையான பலகாரங்கள் நாவில் தித்திப்பதுபோல் பல நினைவுகள் நெஞ்சில் நிழலாடும். சில சுவாரஸ்யமான எண்ணங்கள் மேலோங்கும் தித்திக்கும் திருநாளில் சிலரின் மனவோட்டங்கள்:

கலைசேகர்  குடும்பத்தினர்
என்னை பொறுத்தவரை தீபாவளி என்பது அதன் தத்துவங்கள், வழக்கமான பலகாரங்கள், பழக்கமான படையல்கள், வெளுத்துக்கட்டும் உணவு வகைகள், படபடக்கும் பட்டாசுகள்... ஆகியவையே நினைவில் வரும்.
இதை எல்லாவற்றிற்கும் அப்பாற்பட்டது,

அந்த இனிய நாளில்....அந்த நாளை ஒரு காரணம் காட்டி நமது நெருங்கிய உற்றார் உறவினர்கள் இல்லம் செல்வது, அவர்களுடன் பேசி மகிழ்வது, குழந்தையாய் மாறி அன்பைப் பரிமாறிக்கொள்வது போன்ற உன்னதமான அனுபவங்கள் கிடைப்பதாலேயே இந்த திருநாள் ஒரு முக்கியமான வைபவம் என நான் கருதுகிறேன். பரபரப்பாக இயங்கிக் கொண்டிருக்கும் நமக்கு தீபாவளியும் இல்லை என்றால் உறவுகள் என்னாகும்?
ADVERTISEMENT


இந்த இனிய வேளையில் 'பாரதம்' இணைய இதழ் வாயிலாக அனைவருக்கும் தித்திக்கும் தீபத் திருநாள் நல் வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்.
உறவுகளை மறவாமலிருப்போம்....என்றென்றும் தமிழோடு இணைந்திருப்போம்.


குமரன் - புகழ்பெற்ற  மிம்மி கிரி கலைஞர், பினாங்கு 
இல்லங்கள்தோறும் உறவினர்களும், உள்ளங்கள் தோறும் உற்சாகமும், நிரம்ப.. என்னுடைய தித்திக்கும் தீப ஒளி திருநாள் வாழ்த்துகளை தெரிவித்து கொள்கிறேன்.


சுரேஷ் - சிட்டிசன் மியூசிக் நெட்வோர்க்ஸ், கெடா

மலேசியவாழ் அனைத்து இந்தியர்கள், உறவினர்கள், நண்பர்கள்    அனைவருக்கும் தித்திக்கும் தீபதிருநாள் வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்.
ADVERTISEMENT

No comments:

Post a Comment