Saturday, 28 October 2017

பெஸ்தினோ: வழக்கை தள்ளுபடி செய்தது ஈப்போ உயர்நீதிமன்றம்

புனிதா சுகுமாறன்

ஈப்போ-
பெஸ்தினோ நிர்வாக இயக்குனர்களுக்கு எதிராக  முதலீட்டாளர்கள் தொடுத்த  வழக்கை ஈப்போ உயர்நீதிமன்றம் இன்று தள்ளுபடி செய்தது.

முதலீட்டாளர்கள் தங்களது முதலீடுகளை பெஸ்தினோ நிறுவனத்தில் செய்துள்ளதால் அதற்கு எதிராக வழக்கு தொடுக்க முடியுமே தவிர இயக்குனர்களுக்கு எதிராக தொடுக்க முடியாது என கூறி நீதிபதி டத்தோ சே முகமட் ருஸிமா பின் கஸாலி வழக்கை தள்ளுபடி செய்தார்.
பெஸ்தினோ தங்க முதலீட்டுத் திட்டத்தில் 6,764 பேர் சுமார் 411 மில்லியன் வெள்ளியை முதலீடு செய்த நிலையில் இந்த முதலீட்டை பேங்க் நெகாரா முடக்கியதன் விளைவாக முதலீட்டாளர்களின் பணம் கேள்விக்குறியானது.

2015ஆம் ஆண்டு தொடரப்பட்ட இவ்வழக்கின் தீர்ப்பை முதலீட்டாளர்கள் பெரிதும் எதிர்பார்த்து காத்திருந்த வேளையில் நீதிமன்றத்தின் தீர்ப்பு பெருத்த ஏமாற்றமாக அமைந்திருந்தது.

No comments:

Post a Comment