ஜார்ஜ் டவுன் -
11 பேரின் உயிரை பலிகொண்ட தஞ்சோங் பூங்கா நிலச்சரிவு அலட்சியம் காரணமாக நடந்ததா? என்பது குறித்து போலீசார் விசாரிக்க வேண்டும் என கெராக்கான் கோரிக்கை விடுத்துள்ளது.
கடந்த சனிக்கிழமை நிகழ்ந்த இச்சம்பவத்தின்போது அங்கு பண்யில் ஈடுபட்டிருந்த 14 பேர் நிலச்சரிவில் சிக்கிக் கொண்டனர். இதில் மூவர் உயிருடன் மீட்கப்பட்ட வேளையில் 11 பேர் உயிரிழந்தனர்.
கடந்த 2015ஆம் ஆண்டேஇங்கு மேற்கொள்ளப்படவிருந்த வீடமைப்புத் திட்டத்திற்கான மேம்பாட்டாளரின் விண்ணப்பத்தை இயற்கை வள, சுற்றுச்சூழல் அமைச்சு நிராகத்து விட்ட நிலையில் எவ்வாறு இத்திட்டம் அங்கு தொடங்கப்பட்டது என கெராக்கான் கட்சியின் சட்டம், மனித உரிமை பிரிவின் தலைவர் டத்தோ பல்ஜிட் சிங் குறிப்பிட்டார்,
அமைச்சின் நிராகரிப்பையும் மீறி இத்திட்டம் மேற்கொள்ளப்பட்டதில் குற்றப்பின்னணிகள் இருக்கக்கூடும். குற்றத்தன்மை நிறைந்த அலட்சியம் இந்த விபத்துக்கு காரணமா? என்பது விசாரிக்கப்பட வேண்டும். இதில் சம்பந்தப்பட்டவர்கள் அடையாளம் காணப்பட்டு தண்டிக்கப்பட வேண்டும் என அவர் வலியுறுத்தினார்.
No comments:
Post a Comment