Wednesday, 1 November 2017

வேலை தேடும் பெண்ணை பாலியல் உறவுக்கு அழைப்பதா? வைரலாகும் ஆடியோ


கோலாலம்பூர்-
வேலை தேடும் பெண்ணை தமது காமப்பசிக்கு இலக்காக்க நினைத்த ஓர் ஆசாமியின்  உரையாடல் தற்போது சமூக ஊடகங்களில் வைரலாகி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
தொலைபேசி உரையாடல் வழி ஓர் பெண்ணின் தாயாரிடம் உரையாடும் அந்த ஆசாமி, அப்பெண்ணுக்கு வேலை வாய்ப்புக்காக மேல் அதிகாரிகளிடம் பேசியுள்ளதாகவும் அதனை உறுதி செய்ய வேண்டுமானால் தன்னுடம் பாலியல் வல்லுறவு கொள்ள வேண்டும் எனவும் கூறுகிறார்.
தன்னுடைய ஆசைக்கு இணங்கினால் உங்களது மகளுக்கு வேலை வாய்ப்பு உறுதி செய்யப்படும் என பெற்ற தாயிடமே கூறும் அந்த ஆசாமிக்கு எதிராக சமூக பயனர்கள் தங்களது கண்டனத்தை தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில் இந்த ஆசாமி ஒரு தமிழ்ப்பள்ளியில் ஆசிரியர் என்பதோடு மஇகாவின் கிளைத் தலைவர்  எனவும் கூறப்படுகிறது. இவ்விவகாரம் விஸ்வரூபமாக வெடித்ததைத் தொடர்ந்து சம்பந்தப்பட்ட ஆசாமி மஇகாவில் விலகுவதாக கூறியுள்ள கடிதமும் வைரலாக்கப்பட்டுள்ளது.
மேலும், இந்த ஆசாமியின் பொறுப்பற்ற செயலை கண்டித்துள்ள மஇகா தலைவர்கள் அவரை கண்டித்துள்ளனர் என்பதோடு அவரின் செயலை மஇகா தலைமைத்துவம் ஒருபோதும் தற்காக்காது எனவும் தெரிவித்துள்ளனர்.

No comments:

Post a Comment