கோலாலம்பூர்-
கேமரன் மலை நாடாளுமன்றத் தொகுதி தொடர்பில் எழுப்பப்பட்ட
கேள்விக்கு மஇகா தேசியத் தலைவர் டத்தோஶ்ரீ டாக்டர் எஸ்.சுப்பிரமணியம் பதில் ஏதும் கூறாமல் சென்றார்.
இத்தொகுதியில் போட்டியிட மைபிபிபி கட்சியின் தேசியத்
தலைவர் டான்ஶ்ரீ எம்.கேவியஸ் ஆர்வம் காட்டி வரும் வேளையில்
அங்கு களமிறங்கி பணி ஆற்றி வருகிறார்.
வரும் 14ஆவது பொதுத் தேர்தலில்
இத்தொகுதியில் தான் வேட்பாளராக போட்டியிட வாய்ப்பளிக்கப்பட வேண்டும் என டான்ஶ்ரீ கேவியஸ்
குரலெழுப்பி வரும் நிலையில், மஇகாவின் தொகுதியான இங்கு மஇகா வேட்பாளரே
களமிறக்கப்படுவார் என டத்தோஶ்ரீ சுப்பிரமணியமும் இதர மஇகா தலைவர்களும் கூறி வருகின்றனர்.
கேமரன் மலை தொகுதி குறித்து மஇகாவிடம் பேச்சுவார்த்தை நடத்தப்போகிறேன்
என டான்ஶ்ரீ கேவியஸ் கூறியுள்ளது தொடர்பில் எழுப்பப்பட்ட கேள்வியை புறக்கணித்ததோடு
பதில் ஏதும் கூறாமல் கூட்டத்திலிருந்து விடை பெற்றார் டத்தோஶ்ரீ சுப்ரா.
கடந்த 13ஆவது பொதுத் தேர்தலில்
மஇகாவின் முன்னாள் தேசியத் தலைவரான டத்தோஶ்ரீ ஜி.பழனிவேல் போட்டியிட்டு
வெற்றி பெற்றார். மஇகாவில் ஏற்பட்ட உட்பூசல் காரணமாக மஇகாவிலிருந்து
டத்தோஶ்ரீ பழனிவேல் நீக்கப்பட்டதால் அத்தொகுதி சுயேட்சையானது; சுயேட்சை தொகுதி என்பதால் அங்கு நான் போட்டியிட களப்பணி ஆற்றி வருகிறேன் என
டான்ஶ்ரீ கேவியஸ் தனது தரப்பு வாதத்தை முன்வைக்கின்றார் என்பது குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment