Sunday, 22 October 2017

நிலச்சரிவை விசாரிக்க சிறப்பு விசாரணை ஆணையம்- லிம் குவான் எங்


ஜோர்ஜ்டவுன் -
தஞ்சோங் பூங்காவில் ஏற்பட்ட நிலச்சரிவில் 14 பேர் புதையுண்ட சம்பவம் அதிர்ச்சியளிப்பதாக குறிப்பிட்ட பினாங்கு மாநில முதல்வர் லிம் குவான் எங், இது குறித்து விசாரிக்க சிறப்பு விசாரணை ஆணையம் அமைக்கப்படும் என கூறியுள்ளார்.

இன்று காலையில் ஏற்பட்ட நிலச்சரிவில் மூவர் இறந்த வேளையில் ஒருவர் பினாங்கு அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றார்.

நிலச்சரிவு ஏற்பட்டதற்கான காரணத்தை உறுதியாக கண்டுபிடிப்போம் என கூறிய அவர், அதற்கான அனுமதியை மாநில ஆளுநர் அப்துல் ரஹ்மான் அப்பாசிடம் பெறவுள்ளதாகவும் தெரிவித்தார்.
கட்டுமான தளத்தில் ஏற்பட்ட இந்த சம்பவத்திற்கு வழக்கமான விசாரணை போதாது. அம்னோ கோபுரம், இரண்டாவது பாலம் சம்பவத்தை விசாரிப்பதுபோல் இந்த சம்பவத்திற்கும் மாநில விசாரணை ஆணைக்குழுவை அமைக்கவிருக்கின்றோம். இச்சம்பவத்திற்கான காரணத்தை தீர்மானிக்க நிபுணர்களிடம் ஒப்படைக்கிறோம்.

பாதிக்கப்பட்ட கட்டுமான தொழிலாளர்களுக்கு உதவ மாநில அரசு  எல்லாவற்றையும் செய்யும். நாங்கள் தொழிலாளர்களின் பாதுகாப்பு தரத்தை உறுதிப்படுத்த விரும்புகிறோம் என லிம் குவான் எங் குறிப்பிட்டார்.

No comments:

Post a Comment