"இருள் அகன்று ஒளி வீசும் இனிய தீபாவள் திருநாளைக் கொண்டாடும் மலேசியா வாழ் அனைத்து இந்துக்களுக்கும் 'பாரதம்' மின்னியல் ஏடு தனது வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறது.
இந்த நன்னாளில் ஒளி பிரகாசிப்பது போல் நமது இந்திய சமுதாயமும் வாழ்வில் மிளிர்ந்திட வேண்டும். கல்வி, பொருளாதாரம், வர்த்தகம், அரசியல், கலை என அனைத்துத் துறைகளிலும் சிறப்பான வளர்ச்சி பெறுவதை உறுதி செய்து கொள்வோம்.
பொருளாதார ரீதியில் பின் தங்கிய சமுதாயமாக திகழும் இந்தியர்கள் எதிலும் சளைத்தவர்கள் அல்லர். உழைப்பதற்கு சற்றும் தயங்காத ஓர் இனம் பின்தங்கி கிடப்பதற்கு பல காரணங்களை அடுக்கலாம்.
ADVERTISEMENT
அவ்வகையில் இந்திய சமுதாயத்தை பிரதிநிதிக்கும் அமைச்சர்கள், துணை அமைச்சர்கள், கட்சி தலைவர்கள் என பல்வேறு தரப்பினரும் ஆக்கப்பூர்வமாக செயல்பட்டு இந்திய சமுதாயத்தின் 'இன்றைய தலைவிதியை' மாற்றியமைக்கக்கூடிய வல்லமை படைத்தவர்களாக திகழ்ந்திட வேண்டும்.
அதே வேளையில், 'தலைவர்கள் ஏதாவது செய்வார்கள்' என்ற எதிர்பார்ப்பை கொண்டிருக்காமல் நமது எதிர்கால வாழ்க்கை எதுவென்பதை இன்றைய இளைஞர்கள் கண்டறிந்து அதனை திட்டமிட்டு செயல்படுத்த வேண்டும்.
ADVERTISEMENT
வாழ்த்துகளுடன்
ரா.தங்கமணி,
தலைமை ஆசிரியர், 'பாரதம்' மின்னியல் ஏடு
No comments:
Post a Comment