ரா.தங்கமணி
மலேசியா நாட்டின் 14ஆவது பொதுத் தேர்தல் குறித்து எப்போதுமே ஒரு பரபரப்பு நிலவிக் கொண்டே இருக்கிறது. அடுத்த ஆட்சியை யார் அமைப்பது என எதிர்பார்ப்பு மக்களிடையே மேலோங்கி நிற்கிறது.
இந்த நிலையில் தற்போது 'உங்கள் ஆதரவு யாருக்கு' என்ற கேள்வியோடு ஓர் ஆய்வு உங்களை துரத்திக் கொண்டிருக்கிறது.
உங்களது வீட்டு தொலைபேசி எண்ணுக்கோ கைத்தொலைபேசிக்கோ ஒரு அழைப்பு விடுக்கப்படும். அதில் 'தங்களை அறிமுகப்படுத்திக் கொள்ளும் ஆய்வு நடத்துனர், வரும் 14ஆவது பொதுத் தேர்தலில் உங்களது ஆதரவு யாருக்கு? என கேள்வி எழுப்புகிறார்.
உங்கள் ஆதரவு தேசிய முன்னணிக்கு என்றார் எண் 1ஐயும் பக்காத்தான் ஹராப்பானுக்கு என்றார் எண் 2ஐயும் பாஸ் கட்சிக்கு என்றால் எண் 3ஐயும் அழுத்துங்கள் என கோரிக்கை விடுக்கப்படுகிறது.
அதோடு, உங்கள் தகவல்கள் ரகசியமாக காக்கப்படும் எனவும் நீங்கள் வாக்களிக்கும் மாநிலம், இனம், வாக்காளரா? போன்ற பல கேள்விகளோடு இந்த ஆய்வு உங்களை பின் தொடர்கிறது.
ஆகவே, உங்களது வீட்டு தொலைபேசியோ, கைப்பேசியோ அலறினால், பயப்பட வேண்டாம், தெளிவாக பதிலளியுங்கள். ஆனால் 'உஷார்' மக்களே!
No comments:
Post a Comment