மலேசியத் தமிழர்களிடையே குறும்படங்கள் மீதான ஆர்வம் நம்ப முடியாத அளவுக்கு அதிகரித்திருப்பது ஆரோக்கியமான மாறுதல் என்றே கூறலாம். தமிழில் தயாராகும் குறும்படங்கள் தேசிய அளவிலும், சர்வதேச அளவிலும் விருதுகள் பெற்று வருவது பெருமைக்குரிய ஒன்றாகும்.
திரைப்படத் தயாரிப்பில் ஆர்வமுள்ளவர்களை ஊக்குவிக்கும் வகையில் ஆஸ்ட்ரோ வானவில் பல குறும்படப் போட்டிகளை நடத்திவருகிறது. வெற்றிகரமாக நடந்து முடிந்த 'மகளிர் மட்டும்' குறும்படம் போட்டியைத் தொடர்ந்து இம்முறை குடும்பத்தின் முக்கியத்துவத்தை உணர்த்தும் வண்ணம் “எங்கள் குடும்பம் இனிய குடும்பம்” என்ற கருப்பொருளை மையப்படுத்தி ஒரு குறும்படப் போட்டியை ஏற்பாடு செய்துள்ளது.
போட்டி விபரங்கள் :
போட்டி தவணை: 03 அக்டோபர் 2017 தொடங்கி 02 நவம்பர் 2017 வரை
போட்டி பிரிவுகள்:
பிரிவு 1 : 10 முதல் 12 வயது வரை
பிரிவு 2 : 13 முதல் 17 வயது வரை
பிரிவு 3 : 18 முதல் 25 வயது வரை
திறமையான படைப்பாளிகளை அடையாளம் காணும் வகையிலும் மலேசிய இந்திய சினிமா துறையை வளர்க்க வேண்டும் என்ற நோக்கத்திலும் ஆஸ்ட்ரோ இந்தியப் பிரிவு 2009ஆம் ஆண்டுத் தொடங்கி இப்போட்டியை நடத்திவருகின்றது. இப்போட்டி குறும்படத் தயாரிப்பதில் அதிக ஆர்வம் கொண்டவர்கள் தங்களின் திறமைகளை வெளிப்படுத்தவும் சிறந்த ஒரு தளமாகவும் அமையும்.
ஆஸ்ட்ரோ வானவில் குறும்படப் போட்டி குறித்த மேல் விவரங்களை அறிய www.astroulagam.com.my/shortfilm என்ற அகப்பக்கத்தை வலம் வாருங்கள்.
No comments:
Post a Comment