'தீபாவளி' இந்துக்களின் பெருநாள் என்றாலும் அனைத்து இன மதத்தினரும் சேர்ந்து இந்த நன்னாளை கொண்டாட வேண்டும் என பிரதமர் டத்தோஶ்ரீ நஜிப் துன் ரசாக் வலியுறுத்தினார்.
நாம் அனைவரும் ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கல் என்ற அடிப்படையில் இந்த தீபத்திருநாளை நாம் அனைவரும் சேர்ந்து கொண்டாடலாம்.
பல்வேறு துறைகளில் மலேசியா பல சாதனைகளை நிகழ்த்தியுள்ளது. பல்வேறு வசதிகளுடன் நவீனத்துவத்தை நாம் வேகமாக நெருங்கி கொண்டிருந்தாலும் நமது கலாச்சாரம் மறக்கப்படவில்லை.
தீபாவளி கொண்டாட்டத்தோடு நாட்டின் வளர்ச்சியையும் மக்கள் கொண்டாட வேண்டும். அவ்வகையில் இத்தீப திருநாளை அனைவரும் சேர்ந்து கொண்டாடுவோம். தீப ஒளியை போன்று அனைவரின் வாழ்விலும் பிரகாசம் நிறைந்திருக்க வேண்டும்.
"தீபங்களை கொண்டாடும் தினம் நெருங்கி விட்டது. வண்ணக் கோலங்கள், தீப விளக்குகள் மனதுக்கு நிறைவையும் அமைதியையும் தருகின்றன. அனைவருக்கும் தீபாவளி வாழ்த்துகள்" என டத்தோஶ்ரீ நஜிப் குறிப்பிட்டார்.
No comments:
Post a Comment