கோலாலம்பூர்-
தீபாவளி திருநாளை முன்னிட்டு புக்கிட் ஜாலில் அரங்கில்
அஜெண்டா சூரியா தீபாவளிச் சந்தையை ஏற்பாடு செய்துள்ளது. 400 கடைகளுக்கும் மேல் போடப்பட்டுள்ள் இந்த தீபவளிச் சந்தையில் 'சன் புளோவர்' (Sun Flower) நிறுவனமும் தனது கடையை அமைத்துள்ளது.
கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு
அமைக்கப்பட்ட எங்களது நிறுவனம் தூய தேயிலையையும் அப்பளமும் விநியோகம் செய்கிறது என
அதன் நிர்வாகி ரமேஷ் கூறினார்.
இலங்கையில் உற்பத்தி செய்யப்படும் தேயிலையை இங்கு
விற்பனை செய்து வருகிறோம். தூய தேயிலையான இது தேநீர் அருந்துவதற்கு
மிக சுவையாக இருக்கும். 200 கிராம் அளவு பாக்கெட்டிலான இந்த தேயிலை நாடு முழுவதும் கடைகளில் விற்பனை செய்யப்பட்டு
வருகிறது.
அதேபோன்று சுயமாக தயாரிக்கப்படும் அப்பளமும் தற்போது
விற்பனை செய்து வருகிறோம். இந்தியர்களின் உணவுகளில் தவிர்க்க முடியாத
ஒன்றாகி விட்ட அப்பளம், ஒரு நொறுக்கி தீனி போல ஆகிவிட்டது.
பெரும்பாலான அப்பளங்களை பொரிக்கும்போது அவற்றில்
எண்ணெய் படிந்து கிடப்பதை காணலாம். ஆனால் சன் புளோவரின்
அப்பளம் பொரிக்கப்படும்போது அதில் எண்ணெய் படிந்து கிடப்பதில்லை.
உணவுகள் எண்ணெய் சத்து அளவுக்கு அதிகமாக கலப்பதால்
உடலில் கொழுப்புச் சத்து அதிகமாக அது உடலுக்கு கெடுதலாக அமைகிறது. அதனை தவிர்க்கும் நடவடிக்கையாக சன் புளோவரின் அப்பளத்தை வாங்கி உண்டு மகிலழாம்.
'உணவே மருந்து' என்ற
காலம் மாறி இன்று 'மருந்தே உணவு' என்ற நிலை
உருவாகியுள்ள நிலையில் ஆரோக்கியமான, சுவையானவற்றை வாங்கி உண்பதில்
மக்கள் கவனம் செலுத்த வேண்டும்.
அவ்வகையில் அஜெண்டா சூரியாவின் தீபாவளிச் சந்தையில் 'சன் புளோவரின்' பொருட்களான சுவையில்
சிறந்து விளங்கும் தூய தேயிலையையும்
தரம் நிறைந்த அப்பளத்தையும் மக்கள் வாங்கி பயனடைய வேண்டும் என
ரமேஷ் கேட்டுக் கொண்டார்.
No comments:
Post a Comment