கோலாலம்பூர் செப்30-
சிறு தொழில் வர்த்தகர்கள் தங்களின் தினசரி வியாபாரத்தை பெரிய அளவில் செய்ய வாய்ப்பில்லாம்மல் அவர்கள் தீபாவளி மற்றும் ஆலய திருவிழா காலங்களிலும் இரவுச் சந்தைகளிலும் தங்களின் வியாபாரத்தைச் செய்து தங்களின் வர்த்தகத்தை மேம்படுத்தி வருகின்றனர். இதற்கு தீபாவளி சந்தை பெரும் பாங்காற்றி வருகிறது என்றால் அதுமிகையாகாது.

இது
போன்ற வர்த்தக சந்தைகள் வழி மட்டுமே அதிகமான வியாபாரங்களும் வியாபாரிகளுக்கும்
வாய்ப்புகள் அமைகின்றன. ஆனால் இதனை தடுப்பதற்கும் பொதுமக்களின் வருகையே பாதிப்பு
செய்யும் வகையில் சில தரப்புகள் சிறு தொழில் வர்த்தகர்களுக்கு எதிராக
அரசாங்கத்தில் செய்யும் தேவையற்ற புகார்கள் எங்களுக்கு மண வருத்தத்தை அளிக்கின்றது
என்று பாதிக்கப்பட்ட சிறு தொழில் வர்த்தகர்களில் ஒருவர் தெரிவித்தார்.
தீபாவளி
சந்தைகளில் நாங்கள் வியாபாரம் செய்வது பெரிய அளவில் பணம் சம்பாரிக்கவில்லை. நாங்கள்
சட்டை, பலகாரங்கள்,
தீபாவளிக்குத் தேவையான பொருட்கள் மட்டுமே விற்பனை செய்து வருகின்றோம். இதில் கிடைக்கப்பெறும்
வருமானத்தை நாங்களும் அராசங்கத்திற்கு ஜி.எஸ்.டி, அரசாங்க வரி
என அனைத்தையும் சரியாக செலுத்தியும் எங்களுக்கு இதுபோன்ற பிரச்சினைகள் வருவது
மிகவும் வருத்தமளிக்கிறது.
வியாபார
காலங்களில் அதிகாரிகள் வருவதால் பொதுமக்கள் மத்தியில் அச்சத்தை உருவாக்குவதால்
எங்களின் வியாபாரங்கள் பாதிப்படைக்கிறது.
குறைவான
விலையிலும் மக்களின் வசதிக்கு உற்பட்டு அதிகமான விலைகள் இல்லாமல் குறிப்பிட்ட
இலபத்தில் எங்களின் வர்த்தகத்தை செய்து வருகின்றோம்.
இக்காலக்கட்டத்தில்
சில தரப்புகள் செய்யும் இடையூறுகளை அரசாங்க அதிகாரிகளும் மாநில அரசாங்கமும்
கண்டறிந்து எங்களின் வியாபரத்தை செய்ய வழிவகுக்குமாறு வியாபாரிகள் அரசாங்கத்தை
கேட்டுக் கொண்டனர்.
No comments:
Post a Comment