தாப்பா-
ஒரு வேனும் ஐஸ் லோரியும் மோதி விபத்துக்குள்ளான சம்பவத்தில் 9 பேர் சம்பவ இடத்திலேயே பலியாகினர். தாப்பா ஆயர் கூனிங் ஜாலான் பெசாரில் நிகழ்ந்த இந்த சம்பவத்தில் வேனும் ஐஸ் லோரியும் நேருக்கு நேர் மோதி கொண்டன.
காலை 6.30 மணியளவில் நிகழ்ந்த இவ்விபத்தில் வேனில் பயணித்த 8 பெண்கள் உட்பட 9 பேர் பலியாகினர். இவர்கள் அனைவரும் தோட்டத் தொழிலாளர்கள் ஆவர். 22 வயதுடைய லோரி ஓட்டுநர் கடுமையான காயங்களுக்கு இலக்கானதால் சிகிச்சைக்காக மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார் என தாப்பா மாவட்ட போலீஸ் தலைர் ஓசிபிடி சோம் ஆக் டின் கெலியாவ் தெரிவித்தார்.
மரணமடைந்தவர்களின் உடல்கள் தாப்பா மருத்துவமனைக்குக் கொண்டுச் செல்லப்பட்டன.
No comments:
Post a Comment