அமெரிக்காவின் லோவர் மன்ஹாட்டன் பகுதியில் மர்ம ஆசாமி ஒருவன் மேற்கொண்ட துப்பாக்கிச் சூடு தாக்குதலில் 8 பேர் பலியானதோடு பலர் காயமடைந்தனர்.
இப்பகுதியில் மேற்கு நெடுஞ்சாலையில் உள்ள பள்ளி ஒன்றி மக்கள் கூட்டமாக நடந்து சென்று கொண்டிருந்தனர். அங்கு சைக்கிள் ஓட்டிக் கொண்டும் நடந்து கொண்டிருந்த பொது மக்களை அசுர வேகத்தில் தான் ஓட்டி வந்த லோரியால் மோதி தள்ளினான் அந்த ஆசாமி. அதோடு தான் கொண்டு வந்திருந்த துப்பாக்கியால் அங்கு நடமாடியவர்கள் மீது சராமாரியாக சுட தொடங்கினான்.
தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த் போலீசார் அந்த ஆசாமியை சுற்றி வளைத்து விசாரணை நடத்தி வருகின்றனர். அதில் அவன் உஸ்பெக்கிஸ்தானைச் சேர்ந்தவர் என தெரிய வந்துள்ளது.
இந்த சம்பவத்தில் 8 பேர் பலியானதோடு பலர் காயம் அடைந்தனர்.
No comments:
Post a Comment