ஜூரு-
இரு தொழிற்சாலை பேருந்துகளை உள்ளடக்கிய சாலை விபத்தில் அதன் ஓட்டுனர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர் என செபெராங் பிறை தெங்கா போலீஸ் உதவி ஆணையர் நிக் ரோஸ் நிக் அப்துல் ஹமீட் தெரிவித்தார்.
வடக்கு- தெற்கு நெடுஞ்சாலையில் இன்று நடைபெற்ற இரு தொழிற்சாலை பேருந்துகளை உட்படுத்திய கோர சாலை விபத்தில் 8 பேர் உயிரிழந்த வேளையில் 41 பேர் படுகாயம் அடைந்தனர், எழுவர் எவ்வித காயமும் இன்றி உயிர் தப்பினர்.
இவ்விரு பேருந்து ஓட்டுநர்களின் சிறுநீர், ரத்தம் ஆகியவை பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. பரிசோதனை முடிவு கிடைத்த பின்னரே இதர தகவல்களை வெளியிட முடியும் என அவர் சொன்னார்.
சம்பந்தப்பட்ட இரு ஓட்டுநர்களும் தற்போது தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.
இந்த விபத்தில் கொல்லப்பட்டவர்களில் எழுவர் இந்தோனேசியர்கள் எனவும் ஒருவர் மலேசியர் எனவும் அடையாளம் காணப்பட்டுள்ளது.
காயமடைந்த அனைவரும் தற்போது செபெராங் ஜெயா, புக்கிட் மெர்தாஜம், சுங்கை பாக்காப் போன்ற அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
No comments:
Post a Comment