கோலாலம்பூர்
அரசுத் துறைகளிலும் பொது உயர்கல்விக்கூடங்களிலும்
இந்தியர்களின் எண்ணிக்கை 7 விழுக்காடாக உயர்த்தப்பட
வேண்டும் 2018ஆம் ஆண்டுக்கான வரவு செலவு திட்டத்தில் பிரதமர் நஜிப் கூறியுள்ளது
இந்திய சமுதாயத்தின் மேம்பாட்டை உறுதி செய்வதாக அமையும் என மஇகா தேசியத் தலைவர்
டத்தோஶ்ரீ எஸ்.சுப்பிரமணியம் கூறினார்.
அரசுத் துறை, பொது
உயர்கல்விக் கூடங்களில் இந்திய சமுதாயத்திற்கு 7% ஒதுக்கீடு செய்யப்பட வேண்டும் என
மஇகாவின் பொது பேரவைகளில் பலமுறை கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டன.
அந்த கோரிக்கையை நிறைவேற்றும் வகையில்
பிரதமரின் இந்த அறிவிப்பு இந்திய சமுதாயத்திற்கான முன்னேற்றமாகவே கருதப்படுகிறது
என இன்று மஇகா தலைமையகத்தில் நடைபெற்ற செய்தியாளர் கூட்டத்தில் சுகாதார
அமைச்சருமான டத்தோஶ்ரீ சுப்பிரமணியம் தெரிவித்தார்.
No comments:
Post a Comment