செர்டாங்-
கார் விபத்தைத் தொடர்ந்து வாகன ஓட்டுனர்கள் கைகலப்பில் ஈடுபட்டதால் 40 வயது மதிக்கத்தக்க 6 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். இச்சம்பவம் ஞாயிற்றுக்கிழமை பூச்சோங் ஐ.ஓ.ஐ பேரங்காடி அருகே நிகழ்ந்தது.
டாமான்சாரா- பூங்சோங் நெடுஞ்சாலையில் (எல்டிபி) சாலையில்
டோயோட்டா வியோஸ் கார் ஒன்று, தனக்கு முன்னால் இருந்த புரோட்டோன் சத்ரியா காரின் மீது மோதியது. இதனால் அந்தக் கார் ஓட்டுபவர்களுக்கு இடையே சண்டை மூண்டது. போலீஸ் அங்கு வருவதற்குள் அங்கு சண்டை முற்றிவிட்டது. இன்னும் சிலர் இவர்களுடன் சண்டையில் ஈடுபட்டனர்.
திடீரென்று சத்ரியா காரின் ஓட்டுனர் வேண்டுமென்றே தனது காரைப் பின் நோக்கிச் செலுத்தி, வியோஸ் காரை மோதினார். வியோஸ் கார் தன் காருக்கு பின்னால் இருந்த போலீஸ் காரின் மீது மோத நேர்ந்தது.
போலீசாரின் பேச்சையும் மீறி சண்டையைத் தொடர்ந்ததால் ஆறு பேரை கைது செய்து செர்டாங் போலீஸ் தலைமையகத்திற்கு மேல் விசாரணைக்காகக் கொண்டு செல்லப்பட்டனர் என்று என செர்டாங் ஓசிபிடி மெகாட் முகமட் அமினுடின் தெரிவித்தார்.
No comments:
Post a Comment