பிரதமர் டத்தோஶ்ரீ நஜிப் அறிவித்த பட்ஜெட் 2018இல் 1.5 பில்லியன் மதிப்பிலான யூனிட் டிரஸ்ட் பங்குகள்
ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன மஇகா தேசியத் தலைவர் டத்தோஶ்ரீ டாக்டர் எஸ்.சுப்பிரமணியம் தெரிவித்தார். பெர்மோடாலான் நேஷனல் பெர்ஹாட்
நிறுவனத்தின் மூலம் அமானா சஹாம் 1 மலேசியா எனப்படும் தலா
1 வெள்ளியாகும்.
இந்த பங்குகளை தனிநபர்கள் ஆக்கிரமித்து விடக்கூடாது
எனும் நோக்கில் வசதியானவர்களுக்கு 30 ஆயிரம் பங்குகள்
மட்டுமே ஒதுக்கப்படும். அதேவேளை பி40 பிரிவினர்
இந்த பங்குகளை வாங்குவதற்கு ஏதுவாக தகுதி வாந்ந்த ஒரு லட்சம் இந்தியர்களுக்கு தலா
5,000 வெள்ளி வட்டியில்லா கடனுதவி வழங்கப்படும்.
அடுத்த 5 ஆண்டுகளில் ஏழ்மை
நிலையில் இருக்கும் இந்தியக் குடும்பங்களில் 50 விழுக்காட்டினர்
தங்களது சேமிப்பை உயர்த்த இது வழிவகுக்கும் என்றார் அவர்.
No comments:
Post a Comment