Saturday, 28 October 2017

400 பேருக்கு தீபாவளி அன்பளிப்பு - ஜாலான் பாரு முனீஸ்வரர் ஆலயம் வழங்கியது

சுகுணா முனியாண்டி

செபெராங் பிறை-
தீபாவளி திருநாளை முன்னிட்டு ஜாலான் பாரு ஶ்ரீ முனீஸ்வரர் ஆலயம் 13 ஆண்டாக 400 வசதி குறைந்த குடும்பங்களுக்கும் பேரு குறைந்தவர்களுக்கும் தீபாவளி அன்பளிப்புகளை வழங்கியது.

அண்மையில் ஆலய மண்டபத்தில் நடைபெற்ற இந்நிகழ்வில்  ஆலய  நிர்வாகத்தினர், பிரமுகர்கள் குத்து விளக்கேற்றி  நிகழ்வை தொடக்கி வைத்தனர்.
பினாங்கு மாநிலத்தில் மிக சிறப்பாக செயல்பட்டு வரும் ஜாலான் பாரு ஶ்ரீ முனீஸ்வரர் ஆலயம் பல சிறப்பான ஆக்கபூர்வ திட்டங்களை செயல் படுத்தி வருகின்றது .அனைத்து தரப்பினரின் தேவைகளையுமே நிறைவு செய்து வருகின்றது. மக்களின் பணம் மக்களுக்கே வழங்கும் மிக பெரிய கடப்பாட்டை  ஆலயம் கொண்டுள்ளதாக பிறை ஜாலான் பாரு ஶ்ரீ முனீஸ்வரர் ஆலயத் துணைத் தலைவர் டத்தோ கோபலகிருஷ்ணன் தமது  சிறப்புரையின் போது தெரிவித்தார்.

குறிப்பாக பல்கலைக்கழக மாணவர்கள், சமய பேதனைகள், யுபிஎஸ் ஆர் மாணவர்களுக்கு என இதுவரையில் மூன்றரை  லட்சம் செலவிட்டுள்ளதாகவும் பல்கலைக்கழக மாணவர்களுக்குஅண்மையில்  35,000 வெள்ளி வழங்கியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
ஆலயம் வழிப்பாட்டு தலமாக மட்டும் இல்லாமல் ஏழை எளியோர்களுக்கு உதவுவது, கல்விக்கு முக்கியத்துவம் கொடுப்பது என பல தரப்பட்ட வகையில் உதவி வருவதாகவும் இதுவேஆலயம் கடப்பாடாக கொண்டுள்ளதாகவும் அவர் தமது சிறப்புரையில் தெரிவித்தார்.

வருங்காலங்களில் இதுபோன்ற மக்களின் தேவைகளை அறிந்து ஆலயம் நிச்சயம் செயல்படும் எனவும் அவர் தமதுரையில் தெரிவித்துக் கொண்டார்.
இந்நிகழ்வில் ஆலய நிர்வாகத்தின் முக்கிய பொறுப்பாளர்கள் , பிரமுகர்கள் கலந்துக் கொண்டனர்

No comments:

Post a Comment