சுகுணா முனியான்டி
பினாங்கு-
40 ஆண்டு காலம் கடந்தும் பள்ளியில் ஒன்றாக பயின்ற முன்னாள் மாணவர்களின் சிதறி கிடந்த கடந்த கால ஞாபங்களை மீண்டும் வெளிகொணர்ந்தன.
113 வருட பழைமை வாய்ந்த பாரிட் புந்தார் செயிண்ட் மேரி தமிழ்ப்பள்ளியில் 1972 ஆம் ஆண்டு பயின்ற மாணவர்களின் ஒன்றுகூடல் நிகழ்வு இங்கு அண்மையில் சிறப்பாக நடந்தேறியது.
ஒன்றாய் விளையாடி ,ஒற்றாய் கைகோர்த்து நடந்த நினைவுகள் மீண்டும் வருமா ,பள்ளிக்கு மீண்டும் சென்ற நினைவுகள் மீண்டும் திரும்புமா என்ற தீராத தாகம் மாணவர்களிடையே எழும் வேளையில் இதுபோன்ற ஒன்று கூடும் நிகழ்வின்போது ஒவ்வொரு முன்னாள் மாணவர்களின் ஏக்கங்களுக்கும் தீர்வு கிடைக்கின்றன.
ஒட்டுமொத்த பழைய நினைவுகளையும் பள்ளி நாட்களில் கடந்து சென்ற ஞபகங்களையும் சுமந்து கொண்டு வெளிநாடுகளிலிருந்தும், பிற மாநிலங்களிலிருந்தும் வாழ்ந்து வரும் மாணவர்கள் சந்தித்து மகிழ்ந்தனர். இந்த தருணம் தங்களுக்கு வாழ்நாள் சரித்திரம் என்றும் கருத்துரைத்தனர்.
முன்னாள் மாணவர்களை அங்காங்கே தேடி அலைந்து கண்டபோது மகிழ்ச்சியில் திளைத்து போனேன் ,அனைவரையும் இணைக்கும் நோக்கமாக் இருந்தாலும் முன்னாள் மாணவர்கள் படித்த பள்ளிக்கு முதுகெலும்பு மட்டுமின்றி அஸ்திவாரம் போன்றவர்களாவர். அவர்களை ஒன்றிணைக்க வேண்டும் மீண்டும் பழைய நினைவுகளில் இறுதி காலத்தை கடக்க வேண்டும் என்ற ஆவலில் இந்த ஒன்றுகூடல் ஏற்பாடு செய்யப்பட்டது என இதன் ஏற்பாட்டு குழு தலைவர் ஆறுமுகம் த /பெ முனியாண்டி (வயது 52) தெரிவித்தார்.
படித்த பள்ளிக்கு நன்மை சேர்க்க வேண்டும், அப்பள்ளிக்கு தனியொரு பெருமையை தேடி தர வேண்டும் என்ற முன்னாள் மாணவர்களின் உன்னத நோக்கம்; அதுவேஅனைவரையும் ஒருங்கிணைக்க செய்தது எனவும் ஆறுமுகம் கூறினார்.
வருங்காலங்களில் படித்த பள்ளிலேயே இதுபோன்ற சிறப்பன தருணத்தை ஏற்பாடு செய்யப்போவதாகவும் தம்முடைய அழைப்பை ஏற்று சிரம ம் பாராது நிகழ்வினை க்கு ஒத்துழைப்பு வழங்கிய சக தோழர்களுக்கும் கற்பித்த ஆசிரியர்களுக்கும் அவர் நன்றி தெரிவித்துக் கொண்டார்
இந்த முன்னாள் மாணவர் ஒன்று கூடல் நிகழ்வு பாரிட் புந்தார் விடுதியொன்றில் சிறப்பாக அணிச்சல் விருந்தோம்பல் நிகழ்வுடன் நடைப்பெற்றது .
இந்நிகழ்வில் முன்னாள் ஆசிரியர்களான இரா.கோவிந்தசாமி ,விடி பெரிய விநாயகம் ,கருப்பண்ணன் ஆகியோர் தனி மனிதனின் முன்னேற்றம் சமுதாய முன்னேற்றமாக மாற வேண்டும் எனவும் சிறப்பான நட்புறவுகள் தொடர்பாக வும் சிறப்புறையாற்றினர் .
முன்னாள் மாணவர்கள் ஒன்றுக்கூடல் நிகழ்வில் அனைவரும் அனிச்சல் வெட்டி மகிழ்ந்ததுடன் விருந்தோம்பலும் நடைபெற்றன .
No comments:
Post a Comment