Sunday, 8 October 2017
ஈப்போ லிட்டில் இந்தியா தீபாவளிச் சந்தை: 30% முதல் 70% விழுக்காடு சலுகையில் அதிரடி விற்பனை
ரா.தங்கமணி / புனிதா சுகுமாறன்
தீபாவளி என்றாலே குதூகலத்திற்கு அளவே இருக்காது. அந்தளவு தீபாவளியை முன்னிட்டு தீபாவளி சந்தை, சிறப்பு விற்பனை ஆகியவற்றுக்கு அளவே கிடையாது.
தீபாவளியை முன்னிட்டு லிட்டில் இந்தியா வளாகங்களில் தீபாவளி சிறப்பு விற்பனை பட்டையை கிளப்ப தயாராகி கொண்டிருக்கிறது. கோலாலம்பூர், மலாக்கா, கிள்ளான், பினாங்கு, ஜோகூர் உட்பட பல இடங்களில் உள்ள லிட்டில் இந்தியா வளாகங்கள் தீபாவளி சந்தைக்கு தயாராகியுள்ளன.
அவ்வகையில் ஈப்போ, லிட்டில் இந்தியா வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள தீபாவளி சந்தை தற்போது களை கட்டியுள்ளது. 4ஆம் தேதி தொடங்கிய தீபாவளி சந்தை 18ஆம் தேதி வரை நடைபெறும் என ஈப்போ லிட்டில் இந்தியா வணிகர் சங்கத்தின் தலைவி கலா பாலசுப்பிரமணியம் கூறினார்.
100 கடைகள் அமைக்கப்பட்டு பல்வேறு வணிகங்கள் மேற்கொள்ளப்படும் இந்த தீபாவளி சந்தை ஈப்போவை சுற்றியுள்ள பல வட்டார மக்களுக்கு பயனுள்ள சந்தையாக அமையவிருக்கிறது.
இந்த தீபாவளி சந்தையின் சிறப்பு அம்சமாக 6ஆம் தேதி தொடங்கி 8ஆம் தேதி வரை சிறப்பு சலுகையை ஈப்போ லிட்டில் இந்தியா வணிகர் சங்கம் அறிமுகப்படுத்தியுள்ளது.
இந்த நாட்களில் இங்குள்ள பல கடைகளில் (நகைக்கடை தவிர்த்து) 30 விழுக்காடு முதல் 70 விழுக்காடு வரை சிறப்பு கழிவு வங்கப்படவுள்ளது. இதில் வாங்கப்படும் பொருட்களுக்கு சலுகை வங்குவதோடு சில கடைகளிலும் இந்த திட்டம் கடைபிடிக்கப்படவுள்ளது.
தீபாவளி பெருநாளில் இந்தியர்கள் எளிமையாக, சிறப்பு கழிவுடன் பொருட்களை வாங்கிச் செல்ல ஈப்போ லிட்டில் இந்தியா வணிகர் சங்கம் பொதுமக்களை திரளாக அழைக்கிறது என கலா குறிப்பிட்டார்.
பொருட்களின் மலிவான விலைக்கு பெயர் பெற்றது ஈப்போ லிட்டில் இந்தியா ஆகும். அவ்வகையில் சிறப்பு கழிவுடன் விற்பனை செய்யப்படும் தீபாவளி சந்தையில் பொதுமக்கள் மிகச் சிறந்த அறிவாற்றலுடன் இங்கு தங்களுக்கு தேவையான பொருட்களை வாங்கி செல்லலாம்.
பொருட்களின் விலையேற்றம், சம்பளம் குறைவு, குறைவான விலையில் அதிகமான பொருட்களை வாங்க முடியவில்லேயே என்ற ஏக்கம் இந்த தீபாவளிக்கு தேவையில்லை. 'ஈப்போ லிட்டில் இந்தியாவுக்கு வாங்க; உங்களுக்கு தேவையான பொருட்களை அள்ளிச் செல்லுங்க' என அன்புடன் அழைக்கின்றார் கலா பாலசுப்பிரமணியம்.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment