எதிர்க்கட்சியினர் குறை கூறுவது போல் நாட்டில் குடியுரிமை இல்லாத இந்தியர்களின் எண்ணிக்கை 3 லட்சம் அல்ல; மாறாக 2,500 மட்டுமே என பிரதமர் டத்தோஶ்ரீ நஜிப் துன் ரசாக் சாடினார்.
எதிர்க்கட்சியினர் தங்களின் அரசியல் சுயலாபத்திற்காக தவறான தகவல்களை மக்கள் மத்தியில் பரப்புகின்றனர். நாட்டில் குடியுரிமை இல்லாத இந்தியர்களின் எண்ணிக்கை 2,500 என பதிவு செய்யப்பட்டிருக்கிறது.
அவர்களின் (எதிர்க்கட்சி) கூற்று நிஜம் அல்ல என இன்று கோலாலம்பூர், மெனாரா டிபிகேஎல்-இல் நடைபெற்ற குடியுரிமை வழங்கும் நிகழ்வில் உரையாற்றுகையில் அவர் இவ்வாறு கூறினார்.
'இன மத பேதம் பார்க்காமல், அனைத்து சமூகத்தினருக்கும் உதவிகளை வழங்குவதையே கொள்கையாக கொண்டது தேசிய முன்னணி. அதன் அடிப்படையில் தான், 1,054 இந்தியர்களுக்கு குடியுரிமையை வழங்கப்பட வேண்டும் என்று தீர்மானிக்கப்பட்டது' என்று டத்தோஶ்ரீ நஜிப் மேலும் கூறினார்.
No comments:
Post a Comment