கோலாலம்பூர்-
2018ஆம் ஆண்டுக்கான வரவு செலவு திட்டத்தை (பட்ஜெட்) பிரதமர் டத்தோஶ்ரீ நஜிப் துன் ரசாக் இன்று 27ஆம் தேதி மக்களவையில் தாக்கல் செய்யவுள்ளார்.
மலேசியர்களின் பெரும் எதிர்பார்ப்பாக திகழும் இந்த பட்ஜெட் மக்கள் நலன் சார்ந்ததை உள்ளடக்கியதாக இருக்குமா? அல்லது நாட்டின் 14ஆவது பொதுத் தேர்தலை உள்ளடக்கியதாக இருக்கும் என்பதே தற்போதைய எதிர்பார்ப்பாகும்.
நாட்டின் 14ஆவது பொதுத் தேர்தல் விரைவில் நடத்தப்படலாம் என எதிர்பார்க்கப்படும் இந்த பட்ஜெட்டில் மக்களை கவர்வதற்கான பல திட்டங்கள் அள்ளி வீசப்படலாம் என பலர் எண்ணம் கொண்டுள்ளனர்.
இந்த தேர்தல் மக்கள் நலன் சார்ந்ததாக இருந்தால் மக்களின் நலனுக்கு முன்னுரிமை கொடுத்து அவர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதற்கான திட்டங்கள் உள்ளடக்கப்பட்டிருக்கும்.
தேர்தலை உள்ளடக்கியதாக இருந்தால் 'இனிப்பான' வாக்குறுதிகள் எல்லாம் எவ்வித பாரபட்சமும் இல்லாமல் அள்ளி வீசப்படும்.
2009ஆம் ஆண்டு முதல் பிரதமராகவு நிதியமைச்சராகவும் இருந்து வரும் டத்தோஶ்ரீ நஜிப் துன் ரசாக், பல வரவு செலவு திட்டத்தை அறிவித்துள்ள நிலையில் நாளை அறிவிக்கப்போகும் பட்ஜெட் மக்கள் நலன் சார்ந்ததாக இருக்குமா? தேர்தல் வெற்றியை உள்ளடக்கியதாக இருக்குமா? என்பதே அனைவரின் எதிர்பார்ப்பாக உள்ளது.
நாளை பிரதமர் அறிவிக்கும் 2018ஆம் ஆண்டுக்கான பட்ஜெட் மக்கள் நலன் சார்ந்ததா? தேர்தல் வெற்றியை உள்ளடக்கியதா? என்பதை
இன்னும் சில மணிநேரங்கள் பொறுத்திருந்து பார்ப்போம்.
No comments:
Post a Comment