கோலாலம்பூர்-
மக்களவையில்
இன்று பிரதமர் டத்தோஶ்ரீ நஜிப் துன் ரசாக் தாக்கல் செய்யவிருக்கும் 2018ஆம் ஆண்டுக்கான வரவு செலவு திட்டம் (பட்ஜெட்)
சிறப்பான ஒன்றாக இருக்கும். மக்கள் நலனை முன்னிறுத்தும்
பட்ஜெட்டாக இது அமையும் என்பதில் துளியும் சந்தேகமில்லை என ஐபிஎப் கட்சியின் தலைவர்
செனட்டர் டத்தோ எம்.சம்பந்தன் தெரிவித்தார்.
இந்த பட்ஜெட்டில்
உயர்கல்வி மாணவர்களுக்கான சிறப்பு சலுகைகளை பிரதமர் அறிவிப்பார் என எதிர்பார்ப்படுகிறது. ஐபிஎப் கட்சியின் மாநாட்டில் கூட உயர்கல்வி மாணவர்களுக்கான சிறப்பு சலுகைகள்
குறித்து வலியுறுத்தியுள்ளோம்.
குறிப்பாக
பி40
மக்களுக்கு பயனளிக்கும் வகையில் சில சிறப்பு சலுகைகள் இதில் இடம்பெறலாம்.
மக்கள் நலனை முன்னிறுத்தும் ஒரு பட்ஜெட்டாக இது விளங்கும் என அவர் சொன்னார்.
No comments:
Post a Comment