Friday, 20 October 2017

17 ஆண்டுகளாக காத்துக் கொண்டிருக்கிறேன் - டான்ஶ்ரீ கேவியஸ்

கோலாலம்பூர்-
கேமரன் மலை நாடாளுமன்றத் தொகுதிக்காக கடந்த 17 ஆண்டுகளாக காத்துக் கொண்டிருப்பதாக மைபிபிபி கட்சியின் தேசியத் தலைவர் டான்ஶ்ரீ எம்.கேவியஸ் தெரிவித்தார்.

நான் பிறந்த சொந்த மாநிலமான பகாங்கில் உள்ள இத்தொகுதியின் பல இடங்களில் கடந்த 17 ஆண்டுகளாக சேவை செய்து கொண்டு காத்துக் கொண்டிருக்கிறேன்.

கடந்த 2000ஆம் ஆண்டு அம்னோவின் தலைவராக இருந்த துன் டாக்டர் மகாதீர் முகமது கேமரன் மலை நாடாளுமன்றத் தொகுதியை எனக்கு வழங்குவதாக வாக்குறுதி அளித்தார்.
அச்சமயம் துன் மகாதீர் கேமரன் மலை தொகுதியில் வேலை செய்யுமாறு கேட்டுக் கொண்டார். ஆனால் இப்போது வரை அங்கு சேவை செய்து கொண்டுதான் இருக்கிறேன்.
ADVERTISEMENT

கேமரன் மலை தொகுதியை  மீட்டெடுக்க வேண்டியது அவசியமாகிறது. ஏனெனில் இது மைபிபிபி-இன் தொகுதியாகும். கடந்த 17 ஆண்டுகளாக காத்துக் கொண்டிருக்கிறேன். இதில் மஇகாவின் தலையீட்டையும் சமாளிக்க வேண்டியுள்ளது என அவர் கூறினார்.

தேமு தலைவர் டத்தோஶ்ரீ நஜிப் துன் ரசாக்கின் வேண்டுகோளுக்கிணங்க  தேசிய முன்னணியின் வெற்றிக்காக கடந்த ஈராண்டுகளாக கேமரன் மலையில் சேவை மேற்கொண்டு வருவதாக போக்குவரத்து அமைச்சின் ஆலோசகருமான டான்ஶ்ரீ கேவியஸ் குறுப்பிட்டார்.

இந்நிலையில் வரும் 14ஆவது பொதுத் தேர்தலில் கேமரன் மலை நாடாளுமன்றத் தொகுதியில் மஇகா போட்டியிடும் என அக்கட்சியின் தேசியத் தலைவர் டத்தோஶ்ரீ டாக்டர் எஸ்.சுப்பிரமணியம் அண்மையில் ஊடகச் செய்தியொன்றில் கூறியிருந்தார்.
ADVERTISEMENT



No comments:

Post a Comment