தீபாவளி பெருநாளை முன்னிட்டு அஜெண்டா சூரியாவின்
தீபாவளி விற்பனைச் சந்தை மிக கோலாகலமாக தொடங்கப்பட்டது.
அஜெண்டா சூரியாவின் 16ஆவது தீபாவளிச் சந்தை புக்கிட் ஜாலில் ஸ்டேடியம் அரங்கில் அமைக்கப்பட்டுள்ளது.
7ஆம் தேதி தொடங்கி 17ஆம் தேதி வரை நடைபெறும் இந்த
தீபாவளி விற்பனைச் சந்தையை மலேசியாவுக்கான இந்தியத் தூதர் திருமூர்த்தி அதிகாரப்பூர்வமாக
தொடக்கி வைத்தார்.
இவ்வாண்டு தீபாவளிச் சந்தையில் 400 கூடாரங்கள் அமைக்கப்பட்டுள்ள நிலையில் தீபாவளிக்கான 'ஷோப்பிங்' ஒரே இடத்தில் மேற்கொள்ளும் வகையில் பல வாய்ப்புகள்
ஏற்படுத்தி தரப்பட்டுள்ளன என அஜெண்டா சூரியா நிறுவனத்தின் உரிமையாளர் ஜெகாராவ் சிம்ஹான்சா
தெரிவித்தார்.
இவ்வாண்டு தீபாவளி விற்பனைச் சந்தையில் மலேசியாவைச்
சேர்ந்த விற்பனையாளர்கள் மட்டுமின்றி இந்தியாவைச் சேர்ந்த விற்பனையாளர்களும் பங்கேற்றுள்ளனர்.
மலேசியாவுக்கான இந்திய தூதரகத்தின் ஆதரவோடு இரு
நாட்டு வணிக நடவடிக்கை இங்கு மேற்கொள்ளப்படுகிறது. இதன்வழி மக்கள்
மிகக் குறைந்த விலையில் தங்களுக்குத் தேவையான ஆடைகளையும் பொருட்களையும் வாங்கி செல்லலாம்
என ஜெகாராவ் குறிப்பிட்டார்.
மேலும், மலேசியாவுக்கான இந்திய
தூதர் திருமூர்த்தி பேசுகையில், அஜெண்டா சூர்யாவின் தீபாவளி விற்பனை
சந்தையில் இந்தியாவைச் சேர்ந்த வணிகர்களுக்கு வாய்ப்புகள் வழங்ப்பட்டுள்ளது ஓர் ஆக்கக்கரமான
நடவடிக்கையாகும்.
இந்திய அரசாங்கத்தின் சிறு, நடுத்தர தொழில்
முனைவர் அமைச்சின் ஆதரவோடு மேற்கொள்ளப்பட்டுள்ள இந்நடவடிக்கையின் வழி இரு நாடுகளுக்கான
வர்த்தக வாய்ப்புகள் எதிர்காலத்தில் மிகச் சிறப்பாக அமையலாம்.
16 ஆண்டுகளாக தொடர்ந்து தீபாவளி விற்பனைச்
சந்தையை தொடர்ந்து நடத்தி வரும் அஜெண்டா சூரியா, தொடர்ந்து இதுபோன்ற
தீபாவளி விற்பனைச் சந்தையை நடத்த வேண்டும் என கேட்டுக் கொண்டார்.
இந்த தீபாவளி விற்பனைச் சந்தையில் அமைக்கப்பட்டுள்ள
கூடாரங்கள் மக்கள் நடப்பதற்கு ஏற்ற வசதியோடு அமைக்கப்பட்டுள்ளது. அதோடு இங்கு வாகன நிறுத்திமிட வசதியும் உள்ளது.
ஆடல், பாடல் நிகழ்ச்சியுடன்
நேற்று அதிகாரப்பூர்வமாக தொடங்கிய தீபாவளி விற்பனைச் சந்தையில் விஜய் டிவி அறிவிப்பாளர்கள்
பிரியங்கா, சேது ஆகியோர்கள் ரசிகர்களை மகிழ்ச்சி கடலில் ஆழ்த்தினர்.
அஜெண்டா சூரியா தீபாவளி விற்பனைச் சந்தை தொடக்க
நிகழ்வில் டான்ஶ்ரீ எஸ்.வீரசிங்கம், முன்னாள்
வெளியுறவு துணை அமைச்சர் டத்தோ அ.கோகிலன், இந்திய அரசாங்கத்தின் சிறு, நடுத்தர தொழில் முனைவர் அமைச்சின் பிரதிநிதி
அனில்குமார் உட்பட பொதுமக்கள் பலர் திரளாகக் கலந்து கொண்டனர்.
x
No comments:
Post a Comment