சுகுணா முனியாண்டி
ஜோர்ஜ்டவுன்-
தஞ்சோங் பூங்காவில் ஏற்பட்ட நிலச்சரிவில் இருவர் மரணமடைந்த வேளையில் 14 பேர் மண்ணில் புதையுண்டுள்ளனர்.
இன்று காலை 8.30 மணியளவில் இச்சம்பவத்தில் இரு வங்காளதேச தொழிலாளர்கள் உயிரிழ்ந்தனர்.
தஞ்சோங் பூங்கா, லோரோங் லெம்பா பெர்மாய் 3இல் நிகழ்ந்த இந்த நிலச்சரிவை உறுதிப்படுத்திய பினாங்கு தீவு மாநகர் மன்ற மேயர் மைமுனா சரிஃப், 10 மணியளவில் சம்பவ இடத்திற்கு விரைந்ததாகவும் 14 பேர் மண்ணில் புதையுண்டதாகவும் அவர் சொன்னார்.
இந்நிலையில் 15 முதல் 20 பேர் வரை மண்ணில் புதையுண்டுள்ளதாக தீயணைப்பு, மீட்புப் படை கூறியுள்ளது.
No comments:
Post a Comment