Saturday, 23 September 2017

சிலாங்கூரை மீட்டெடுக்க மூன்று மந்திரி பெசார்கள் இணைந்துள்ளனர்- டான்ஶ்ரீ நோ ஒமார்

ஷா ஆலம்-
நாட்டின் 14ஆவது பொதுத் தேர்தலில் சிலாங்கூர் மாநிலத்தை தேசிய முன்னணி மீண்டும் வென்றெடுப்பதற்காக மாநில மந்திரி பெசார்கள் மூவர் இணைந்துள்ளனர்.

“நாம் கலந்து பேசிவிட்டோம்…… டான்ஶ்ரீ முகம்மட் தாயிப் மட்டுமல்ல, அபு ஹசான் ஓமார்,  டாக்டர் முகமட் கிர் தோயோ மூவரும், சிலாங்கூரில் தேமுவின் வெற்றியை உறுதிபடுத்த என்னோடு இணைந்து போராட உள்ளனர்" என சிலாங்கூர் மாநிலத்தின் அம்னோ தொடர்புக்குழுத் தலைவர் டான்ஶ்ரீ நோ ஒமார் தெரிவித்தார்.

முகமட் முகமட் தாயிப் அம்னோவில் இணைந்தது, மாநில பாரிசானுக்கு  ஒரு புதிய ஒளியைக் கொண்டுவந்துள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

“அவர்கள் (மந்திரி பெசார்) பதவியைப் பார்க்கவில்லை, முக்கியமானது என்னவென்றால், கடந்த காலங்களில் அவர்கள் செய்தவை, இன்றும் தொடர வேண்டும்" என்று அவர் கூறினார்.

நகர்ப்புற நலன், வீட்டுவசதி,  உள்ளாட்சி அமைச்சருமான நோ ஓமார், கோலாலம்பூருக்கு அருகில் உள்ள டுசூன் துவா, காஜாங் சட்டமன்றத் தொகுதிகளில், மூன்று குடியிருப்புகளைப் பார்வையிட்டப் பின்னர், செய்தியாளர்களிடம் பேசுகையில் இவ்வாறு கூறினார்.

No comments:

Post a Comment