Saturday, 30 September 2017

தோட்டம் திரைப்படம் மக்களுக்கு மீண்டும் தோட்டத்தை நினைவு கூற வைக்கும்! – இயக்குனர் அரங்கண்ணல் ராஜூ


தோட்டம் திரைப்படம் தோட்டத்தில் வாழ்ந்த மக்களுக்கு அவர்களுடைய தோட்டபுற வாழ்க்கையே மீண்டும் நினைவு கூறும் திரை வாசமாகவும் மண் வாசனையே கண் முண் நிறுத்தும் என்று தோட்டம் திரைப்படத்தின் இயக்குனர் அரங்கண்ணல் ராஜூ தோட்டம் இசை வெளியீடு விழாவில் தெரிவித்தார்.

தோட்டப்புற வாழ்க்கையே மைய்யமாக வைத்து அவர்களின் வாழ்க்கையில் ஏற்ப்பட்ட சம்பவங்களையும் பிரச்சினைகளையும் கருவாகக் கொண்டு உருவான திரைப்படம் தோட்டம்.


இத்திரைப்படம் முழுக்க முழுக்க மலேசியாவில் தயாரிக்கப்பட்டு படமாக்கப்பட்டுள்ளது. இத்திரைப்படத்தை உள்ளூர் இயக்குநர் அரங்கண்ணல் ராஜூ இயக்கியுள்ளார்.

இத்திரைப்படத்தின் சிறப்பு காட்சி அண்மையில் தமிழகத்தில் செய்தியாளர்கள், முன்னணி இயக்குனர்கள் முன்னிலையில் சிறப்பு காட்சி வெளியீடு கண்டது.



தோட்டப்புற வாழ்க்கையே பார்க்காத இன்றைய இளைஞர்களுக்கு இத்திரைப்படம் புதுப்படமாக இருந்தாலும் அதிகமான இந்தியர்கள் பிரிட்டிஷ் ஆட்சியில் 19ஆம் நூற்றாண்டு தமிழகத்திலிருந்து இலங்கை, மலேசிய போன்ற நாடுகளுக்கு தோட்ட வேலைக்காக தமிழர்கள் தான் கப்பலில் அழைத்துச் செல்லப்பட்டார்கள். 200 ஆண்டு நிகழ்வை நினைவு கூறுவதற்கும் அவர்களுக்கு உரிய மரியாதை செய்யும் வகயிலும் இத்திரைப்படத்தை இயக்குநர் சமர்ப்பித்துள்ளார்.

தோட்டம் திரைப்படத்தின் இயக்குநர் அரங்கண்ணல் ராஜூவின் தந்தையாரும் தோட்டத் தொழிலாளர்களில் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது.


சாய் இத்திரைப்படத்தின் பாடல்களை அமைத்துள்ளார். படத்தின் பாடல் வரிகளை மறைந்த பாடலாசிரியர்கள் நா.முத்துகுமார், அண்ணாமலை ஆகியோர் எழுதியுள்ளனர்.

இத்திரைப்படம் விரைவில் நாடு முழுவதுமுள்ள திரையரங்குகளில் வெளியீடு காணவுள்ளது. இதற்கிடையில், இத்திரைப்படத்தின் இசை வெளியீடு அண்மையில் தலைநகரிலுள்ள டான்ஸ்ரீ சோமா அரங்கில் மிகச் சிறப்பாக நடைபெற்றது. ரிவாய்ன் புரோடக்‌ஷன் இந்நிகழ்வை சிறப்பாக வழிநடத்தினர் என்பது குறிப்பிடத்தக்கது.


இந்நிகழ்வை சிறப்பிக்க உள்ளூர் இயக்குனர் எஸ்.டி. பாலா, டி.எச்.ஆர். ராகா கவிமாறன், மூத்தக் கலைஞர் எம்.எஸ்.மணியம், எம்.எஸ்.கே.செல்வமேரி, இளங்கோ அண்ணாமலை, டத்தோ சுபாஷ் என முக்கிய பிரமுகர்கள் கலந்து இந்நிகழ்வை மேலும் மெருகூட்டினர்.

No comments:

Post a Comment