ஆஸ்ட்ரோவின்
மாபெரும் 3-வது
அனைத்துலக இந்திய வர்த்தக விழா மற்றும் தீபாவளி கொண்டாட்டம் நிகழ்ச்சி செப்டம்பர் 21-ஆம்
தேதி இனிதே தொடங்கி எதிர்வரும் 24-ஆம் தேதி வரை ஜிஎம் கிள்ளான் வாளகத்தில் காலை 11
மணி முதல் இரவு 11
மணி வரை மிகப் பிரமாண்டமாக நடைபெறவுள்ளது.
முதல் Astro
Circle ஏற்றி நடத்திய புதையல் தேடும்
போட்டி, ஆடை
அலங்காரம், டி.எச்.ஆர்
ராகா அறிவிப்பாளர்களின் நேரடி வெளி ஒலிபரப்பு என பல நிகழ்ச்சிகள் காலை தொடங்கி
மாலை வரை இடம்பெற்றது.
அதன் பிறகு,
இரவு 7 மணிக்கு ‘என்றுமே
ராஜா’ எனும்
கலைநிகழ்ச்சி மிகச் சிறப்பாக நடந்தேறியது. இந்நிகழ்ச்சியில்,
பின்னணி
பாடகி சாதனா சர்கம் கலந்து கொண்டு சிறப்பு செய்தார். அதுமட்டுமின்றி,
நம் உள்ளூர் கலைஞர் சதிஸ் மற்றும் மகேனுடன் இணைந்து பாடி அவர்களைப் பாராட்டவும்
செய்தார். இந்நிகழ்ச்சி நேரடி ஒளிபரப்பு ஆஸ்ட்ரோ உலகம் முகநூலில் இடம்பெற்றது.
எதிர்வரும்
23-ஆம் தேதிபின்னணி பாடகி ஹரிணி கலந்து
கொள்ளும் ‘தீபாவளி
கொண்டாட்டம்’
கலைநிகழ்ச்சி இரவு 7 மணி தொடக்கம் 10 மணி
வரை நடைபெறும். இந்நிகழ்ச்சியில் நம் உள்ளூர் கலைஞர்களின் அசத்தலான படைப்புகளைக்
கண்டு களிக்கலாம்.
மேல்விவரங்களுக்கு www.astroulagam.com.my அல்லது www.facebook.com/AstroUlagam அகப்பக்கங்களை
நாடுங்கள்.
No comments:
Post a Comment