Wednesday, 27 September 2017

மஇகாவின் சீர்திருத்தங்கள் வெற்றியை தேடி தரும்- டத்தோ டி.மோகன்


கோலாலம்பூர்-
வரும் 14ஆவது பொதுத் தேர்தலில் இந்தியர்களின் ஆதரவை பெறுவதற்கு  மஇகா முன்னெடுக்கும் திட்டங்கள் நிச்சயம் வெற்றியை தேடி தரும் என மஇகா உதவித் தலைவரான டத்தோ டி.மோகன் குறிப்பிட்டார்.

இந்தியர்களிடையே வலுவான ஆதரவை பெறுவதற்கு மஇகா பல்வேறு சீர்திருத்தங்களை மேற்கொண்டுள்ளது. கிளை அளவில் மேற்கொள்ளப்படுகின்ற சீர்திருத்தங்களின் வழி மஇகா இந்தியர்களிடையே வலுவான கட்சியாக நிலைபெறுவதற்கு வழிவகுக்கும்.

கிளை அளவில் மேற்கொள்ளப்படும் செயல் திட்டங்களின் மூலமாக இந்தியர்களின் ஆதரவு பெற்ற கட்சியாக மஇகா உருவெடுப்பது திண்ணமாகும்.



அதேவேளயில், வரும் 14ஆவது பொதுத் தேர்தலில் போட்டியிடும்  மஇகா வேட்பாளர்கள் வெற்றி பெறுவது அவசியம் என பிரதமர் டத்தோஶ்ரீ நஜிப் துன் ரசாக் சுட்டிக் காட்டியுள்ளார்.

அவர் (பிரதமர்) சுட்டிக் காட்டியுள்ளதை போல் வெற்றி பெறக்கூடிய வேட்பாளர்களை மஇகா களமிறக்கும். வேட்பாளர் யார் என்பதை மஇகா தேசியத் தலைவர் டத்தோஶ்ரீ டாக்டர் எஸ்.சுப்பிரமணியம் முடிவு செய்வார்.


மஇகா  வேட்பாளர்களின் வெற்றி உறுதி செய்வதற்கு ஏதுவாக தகுதி வாய்ந்த வேட்பாளர்கள் அடையாளம் காணப்பட்டு போட்டியிடுவர் என டத்தோ மோகன் நம்பிக்கை தெரிவித்தார்.

No comments:

Post a Comment