ரா.தங்கமணி
கோலாலம்பூர்-
ஐபிஎப் கட்சியின் தேசியத் தலைவர் டத்தோ எம்.சம்பந்தன் இன்று செனட்டராக உறுதிமொழி ஏற்றுக் கொண்டார்.
இன்று மேலவை சபாநாயகர் டான்ஶ்ரீ எஸ்.ஏ.விக்னேஸ்வரன் முன்னிலையில் டத்தோ சம்பந்தன் செனட்டராக பதவியேற்றுக் கொண்டார்.
கடந்த 15 ஆண்டுகளுக்கும் மேலாக தேசிய முன்னணி விசுவாசமான ஆதரவை புலபடுத்தி வரும் ஐபிஎப் கட்சிக்கு செனட்டர் பதவி வழங்கப்பட வேண்டும் என பல ஆண்டுகளாக கோரிக்கை விடுக்கப்பட்டு கொண்டிருந்தது.
தற்போது டத்தோ சம்பந்தன் செனட்டராக பதவியேற்றுக் கொண்டதன் வழி ஐபிஎப் கட்சியின் பலநாள் 'கனவு' நிறைவேறியுள்ளது.
அடிமட்ட மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த தோற்றுவிக்கப்பட்ட ஐபிஎப் கட்சியின் தோற்றுனர் அமரர் டான்ஶ்ரீ எம்.ஜி.பண்டிதனுக்கு பிறகு செனட்டர் பதவியை ஏற்று புதிய வரலாறு படைத்துள்ள டத்தோ சம்பந்தனுக்கு 'பாரதம்' மின்னியல் ஊடகம் வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறது.
No comments:
Post a Comment