புனிதா சுகுமாறன்
ஈப்போ-
'சொரியாசிஸ்' நோயினால் பாதிக்கப்பட்டு பெரும் சிரமத்தை எதிர்நோக்கி வரும் மகேசனின் குடும்பத்தினருக்கு உதவிக்கரம் நீட்ட பலர் முன்வந்துள்ளனர்.
அண்மயில் 'பாரதம்' மின்னியல் ஊடகத்தில் வெளியிடப்பட்ட 'வெளியே கல் வீடு; உள்ளே வறுமையின் கோரம்' எனும் தலைப்பில் மகேசன், அவரது குடும்பத்தினர் எதிர்நோக்கும் பிரச்சினைகள் விவரிக்கப்பட்டன.
இச்செய்தியை கண்டு மகேசனின் குடும்பத்தினருக்கு உதவிக்கரம் நீட்ட பலர் முன்வந்துள்ளனர்.
அவ்வகையில் மஇகா தேசிய மகளிர் பிரிவு துணைத் தலைவியும் பேராக் மாநில மஇகா மகளிர் பிரிவுத் தலைவியுமான திருமதி தங்கராணி, மகேசனின் குடும்பத்தினரைச் சந்தித்து நிலவரங்களை கண்டறிந்தார். அதோடு பள்ளிக்கூடம் பயிலும் மகேசனின் பிள்ளைகளுக்கு பிரத்தியேக வகுப்புகளுக்கு (Tuisyen Class) ஏற்பாடு செய்து தருவதாக கூறினார்.
மேலும், சமூகநல இலாகா அதிகாரி பார்வதி மகேசனுக்கு உதவிக்கரம் நீட்டும் வகையில் மாற்றுத்திறனாளி அட்டை ஏற்பாடு செய்து தருவதாகக் கூறினார். 'லைட்அவுஸ் ஹோப்' இயக்கத்தின் தலைவர் ரிச்சர்ட் லீ-இன் கவனத்திற்குக் கொண்டு சென்று அடிப்படை உதவிகளை வழங்க ஏற்பாடு செய்தார்.
அதோடு, பேராக் மாநில மைபிபிபி கட்சி இளைஞர் பிரிவின் தலைவர் முகமட் நோர் பட்ஸில் பின் சாகுல் ஹமிட், ஈப்போ பாராட் தொகுதி மைபிபிபி இளைஞர் பிரிவுத் தலைவர் புவன் ஆகியொர் மகேசனின் இல்லத்திற்குச் சென்று நிலவரங்களை கண்டறிந்து, அவருக்கு சிறு உதவிகளை வழங்கினர்.
No comments:
Post a Comment